சவுத்தாம்ப்டன் (இங்கிலாந்து): இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மழை,வெளிச்சமின்மை ஆகிய காரணங்களால் ஆட்டம் பலமுறை தடைப்பட்டது. இதனால், இறுதிப்போட்டிக்கு முடிவை அறிய ஆறாவது நாளான (ரிசர்வ் டே) இன்றும் (ஜுன் 23) விளையாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இறுதிப்போட்டியின் இறுதிநாள் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
முதல் பத்து ஓவர்
ஆறாம் நாள் (ரிசர்வ் டே) ஆட்டம் தொடங்கவதற்கு முன் சச்சின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
'இன்றைய ஆட்டத்தின் முதல் பத்து ஓவர்கள் மிகவும் முக்கியமானது. முதல் செஷன்தான் போட்டி யாரை நோக்கி நகர்கிறது என்பதை தீர்மானிக்கும்.
இந்தியா தனது ரன்ரேட்டை 2.3 என்ற கணக்கிலேயே வைத்திருந்தால் மட்டுமே இப்போட்டியை முன்நகர்த்தி செல்ல முடியும். இன்று இரண்டு அணிகளும் வெவ்வேறு விதமான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 30 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 64 ரன்களை எடுத்திருந்தது.
தொடங்கியது ரிசர்வ் டே ஆட்டம்
இன்றைய ஆறாம் நாள் (ரிசர்வ் டே) ஆட்டத்தை கேப்டன் விராட் கோலி 8 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் தொடங்கி, தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: WTC FINAL: டிராவை நோக்கி நகரும் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி