துபாய்: இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடர் (2021), கரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடக்குமா என்ற கேள்வி முன்னதாக எழுந்தது.
கைவிரித்த பிசிசிஐ
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய இடங்களை இந்தியாவிற்கு மாற்றாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. முன்னதாக, இந்தியாவில் உலகக்கோப்பை தொடரை நடத்த வாய்ப்பில்லை என நேற்று (ஜுன் 29) பிசிசிஐ தெரிவித்திருந்தது.
ஐசிசியின் அறிவிப்பு
இந்நிலையில், ஏழாவது உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்கி ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறும் என சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று (ஜூன்.29) அறிவித்துள்ளது.
-
🚨 ANNOUNCEMENT 🚨
— ICC (@ICC) June 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details 👉 https://t.co/FzfXTKb94M pic.twitter.com/8xEzsmhWWN
">🚨 ANNOUNCEMENT 🚨
— ICC (@ICC) June 29, 2021
Details 👉 https://t.co/FzfXTKb94M pic.twitter.com/8xEzsmhWWN🚨 ANNOUNCEMENT 🚨
— ICC (@ICC) June 29, 2021
Details 👉 https://t.co/FzfXTKb94M pic.twitter.com/8xEzsmhWWN
அதன்படி, டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கும் எனவும், இறுதிப்போட்டி நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அட்டவணை எப்போது?
உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் போட்டியிடும் அணிகளின் பிரிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தொடரின் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டி20 உலக கோப்பை: கைவிரித்தது இந்தியா; அடுத்தது என்ன?