ETV Bharat / sports

தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் - பாபர் அசாம்

ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் 144 ரன்களை சிக்ஸர் மூலம் சேஸ் செய்து தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என்ற பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.

Pakistan defeat S Africa to win T20I series
தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
author img

By

Published : Apr 18, 2021, 7:50 PM IST

சென்சூரியன்: தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரைத் தொடர்ந்து, டி20 தொடரையும் பாகிஸ்தான் அணி வென்று கோப்பையை கைபற்றியது.

தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி வென்றது.

இதைத்தொடர்ந்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 போட்டியில் விளையாடியது. ஏற்கனேவே 2-1 என்று முன்னிலை பெற்றிருந்து பாகிஸ்தான் அணி நான்காவது டி20 போட்டியில் களமிறங்கியது.

Pakistan defeat S Africa to
தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரை வென்ற பாகிஸ்தான்

சென்சூரியனிலுள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் பவுலிங்கை தேர்வு செய்தார்.

தென் ஆப்பரிக்காவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ரஸ்ஸி வேன் டர் டுசன் 52, தொடக்க பேட்ஸ்மேன் 33 ஆகியோர் அதிகபட்சமாக ரன்கள் அடித்தனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக மர்கராம் 11 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் திரும்ப, 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் மட்டுமே தென் ஆப்பரிக்கா அணி எடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் ஃபாகின் அஸ்ரஃப், ஹசன் அலி தலா 3 விக்கெட்டுகளையும், ஹரீஷ் ராஃப் 2, ஷகீன் அப்ரீடி மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் தொடக்க பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம், ஃபக்தர் ஸமான் ஆகியோர் சிறப்பான பார்னர்ஷிப்பை அமைத்தனர்.

24 ரன்களில் பாபர் அசாம் அவுட்டாக, நன்கு விளையாடி வந்த ஸமான் அரைசதத்தை பூர்த்தி செய்தார். 60 ரன்களில் இவரும் அவுட்டாகினார்.

பாபர் அசாம், ஃபக்தர் ஸமான் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க தடுமாறியதுடன் தங்களது விக்கெட்டையும் பறிகொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தவித்த நிலையில், வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பந்து மீதமிருக்கும் நிலையில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் நவாஸ் சிக்ஸர் அடித்து தனது அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

இவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் எடுத்திருந்தார். ஒரு நாள் தொடரைத் தொடர்ந்து டி20 தொடைரையும் 3-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைபற்றியது.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.