ETV Bharat / sports

பயிற்சியில் மயாங்க் அகர்வாலுக்கு தலையில் காயம்! - concussion test

இங்கிலாந்தில் பயிற்சியின் போது சிராஜ் வீசிய பந்து மயாங்க் அகர்வால் தலையில் பட்டு காயத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயாங்க் அகர்வால்
மயாங்க் அகர்வால்
author img

By

Published : Aug 2, 2021, 10:58 PM IST

நாட்டிங்காம் (இங்கிலாந்து): இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இருக்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஆக.4) நாட்டிங்காம் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில், இந்திய அணி அங்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பயிற்சியில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பந்தை இந்திய தொடக்க ஆட்டக்காரர் மயாங்க் அகர்வால் எதிர்கொண்டுள்ளார். அப்போது ஒரு ஷார்ட்-லெந்த் பந்து அவரின் தலையை பதம் பார்க்க ஆடுகளத்தில் மயாங்க் வலியில் துடித்துள்ளார்.

மூளையதிர்ச்சி சோதனை

இதுகுறித்து துணைக் கேப்டன் அஜிங்கயா ரஹானே கூறுகையில்,"மயாங்க் அகர்வாலுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் இன்னும் சரியாகவில்லை. மருத்துவக்குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தலைக்கவசம் அணிந்திருந்தாலும், பின் மண்டையில் சிறிது வலியுடன்தான் அவர் டிரஸ்ஸிங் ரூம் திரும்பினார். அதனால், அவருக்கு வழக்கமான மூளையதிர்ச்சி சோதனை நடத்தப்பட இருக்கிறது" என்றார்.

யாருக்கு வாய்ப்பு?

இதனால், முதல் போட்டியில் மயாங்க் அகர்வால் விளையாட வாய்ப்பில்லை என்பதால் கே.எல்.ராகுல், அபிமன்யூ ஈஸ்வரன், அனுமான் விஹாரி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோர் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியதால் பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: EXCLUSIVE: ஹாக்கியை ஊக்கப்படுத்துங்கள் - இந்திய வீராங்கனை மோனிகா மாலிக்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.