ETV Bharat / sports

லார்ட்ஸூக்குப் பின் லீட்ஸ்: மூன்றாவது போட்டிக்குத் தயாராகும் இந்தியா! - virat kholi

மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மூன்றாவது போட்டிக்கு தயாராகும் இந்தியா
மூன்றாவது போட்டிக்கு தயாராகும் இந்தியா
author img

By

Published : Aug 23, 2021, 7:21 PM IST

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டி டிராவானது. அடுத்த, இரண்டாவது போட்டியில் இந்திய அணி, 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து, மூன்றாவது டெஸ்ட் லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும், அசத்தலாக விளையாடியுள்ள இந்திய அணி வீரர்கள் இந்தப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னிலையை தக்கவைக்கும் முனைப்பில் உள்ளனர்.

மூன்றாவது போட்டிக்கு தயாராகும் இந்தியா
லீட்ஸ் ஹெடிங்லி மைதானம்

வெறியில் வீரர்கள்

இந்நிலையில், ஹெடிங்லி மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி பெறும் புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தொகுப்பில், இந்திய கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல், இஷாந்த் சர்மா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டுவரும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அக்.17 - நவ.14- டி-20 உலக கோப்பை தீபாவளி- முழு அட்டவணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.