ETV Bharat / sports

இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா...! - பிசிசிஐ

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

india-to-tour-england-for-5-test-series-in-aug-sep-next-year

author img

By

Published : Nov 18, 2020, 9:19 PM IST

2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதன்பின்னர் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இதற்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

அதனோடு சேர்த்து அடுத்த ஆண்டில் இங்கிலாந்தில் நடக்க கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 4 வரையும், இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 10 முதல் 13 வரையும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 16 முதல் 20 வரையிலும் நடக்கவுள்ளது.

இதுபோக பார்வையற்றோருக்கான ஆஷஸ் தொடர், மகளிருக்கான கிரிக்கெட் தொடர் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ட்ரென்ட் பிரிட்ஜில் ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கி, கடைசி டெஸ்ட் போட்டி ஓல்ட் ப்ரஃபோர்டு மைதானம்த்தில் செப்.14ஆம் தேதி முடிவடையவுள்ளது.

இதையும் படிங்க: ஜஸ்டின் லாங்கருக்கு உதவிய டான் பிராட்மேன்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.