நியூசிலாந்து அணியின் கேப்டனும் முன்னணி பேட்மேனுமான கேன் வில்லியம்சனின் 31ஆவது பிறந்தநாள் இன்று. சர்வதேச அளவில் தற்போது ஆடிவரும் சிறந்த வீரர்களின் பட்டியல் ஒன்றை தயாரித்தால் அதில் வில்லியம்சனுக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்.
விராத் கோலி, ஜோ ரூட் ஆகிய டாப் வீரர்களுக்கு இணையானவர் வில்லியம்சன். சிறந்த டெஸ்ட் வீரரான வில்லியம்சன், டெஸ்டில் வைத்திருக்கும் சராசரி 53.96. பொதுவாக டெஸ்டில் 50க்கும் மேல் சராசரி வைத்திருந்தாலே அவர் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று கருதப்படுவார்கள். மேலும், வில்லியம்சன் டெஸ்டில் இதுவரை 24 சதங்களும் நான்கு இரட்டை சதங்களும் அடித்துள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் உச்சமாக தனது நியூசிலாந்து அணிக்கு முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பெற்றுத்தந்த கேப்டன் என்ற பெருமை வில்லியம்சன்னையே சாரும்.
-
🔹 15208 international runs
— ICC (@ICC) August 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
🔹 37 centuries
🔹 #WTC21 winning captain
Happy birthday to @BLACKCAPS skipper Kane Williamson. pic.twitter.com/Ran4OshW88
">🔹 15208 international runs
— ICC (@ICC) August 8, 2021
🔹 37 centuries
🔹 #WTC21 winning captain
Happy birthday to @BLACKCAPS skipper Kane Williamson. pic.twitter.com/Ran4OshW88🔹 15208 international runs
— ICC (@ICC) August 8, 2021
🔹 37 centuries
🔹 #WTC21 winning captain
Happy birthday to @BLACKCAPS skipper Kane Williamson. pic.twitter.com/Ran4OshW88
வில்லியம்சன்னின் சாதனைகள்
- 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் தொடர் நாயகன்
- ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்
- 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் ஐசிசி தலைசிறந்த அணியின் கேப்டன்
- டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்த இளம் வீரர்.
இதையும் படிங்க: TOKYO OLYMPICS: ஒலிம்பிக்கில் இந்திய தேசிய கீதம்... எத்தனை ஆண்டுகள் கனவு தெரியுமா...