ETV Bharat / sports

இலங்கை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

லண்டன்: கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, இலங்கை சுற்றுப்பயணம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

author img

By

Published : Dec 24, 2020, 11:42 AM IST

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்

தென் ஆப்பிரிக்காவில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக நிலவிய அசாதாரண சூழல் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், தென் ஆப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி நாடு திரும்பியது.

தென்னாப்பிரிக்காவிலிருந்த வருகைதரும் அனைவரும் தங்களை இரண்டு வாரத்திற்கு சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து டிசம்பர் 10ஆம் தேதி பிரிட்டனுக்குத் திரும்பிய வீரர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக அவர்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரச் செயலாளர் மாட் ஹான்காக் புதன்கிழமை தெரிவித்தார்.

மேலும், இலங்கை சுற்றுப்பயணம் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி ஜனவரி 2, 2021 அன்று புறப்பட உள்ளது.

தற்போதைய சூழல் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனிலிருந்து வரும் வணிக விமானங்களுக்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது. இருந்தபோதிலும், கிரிக்கெட் தொடர் உறுதிசெய்யப்படும்பட்சத்தில் இங்கிலாந்து அணி தனி விமானம் மூலம் இலங்கைக்கு பயணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.