லண்டன்: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடரானது, உலகப்பிரசித்தி பெற்றது. 2021-2022 ஆஷஸ் தொடர், இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் ஆஷஸ் தொடர் நடத்தப்படுகிறது.
ஆண்களுக்கான முதல் ஆஷஸ் போட்டி, டிசம்பர் 8 – 12 பகலிரவு ஆட்டமாக பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்திலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 16 – 20 ஆகிய தேதிகளில் அடிலெய்ட் ஓவல் மைதானத்திலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பராம்பரியமான பாக்ஸிங்-டே டெஸ்ட்டான மூன்றாவது போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 – 30 தேதிகளில் நடைபெறுகிறது.
நான்காவது, ஐந்தாவது போட்டிகள் முறையே அடுத்தாண்டு ஜனவரி 5-9 தேதிகளில் சிட்னி மைதானத்திலும், ஜனவரி 14 -18 தேதிகளில் பெர்த் ஆப்டஸ் மைதானத்திலும் நடைபெற இருக்கிறது.
26 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியானது சிட்னியில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கான ஆஷஸ் தொடரானது, ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள், மூன்று டி20 என்று மல்டி-ஃபார்மட் முறையில் நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: பிசிசிஐயின் சிறப்பு பொதுக் கூட்டம்: டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுமா?