ஹாங்சோ : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வங்கதேச அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிப் போட்டிக்குச் சென்றது.
முதலில் விளையாடிய வங்கதேச மகளிர் அணி 17 புள்ளி 5 ஓவர்களில் 51 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர், வங்கதேச பந்துவீச்சை விளாசி தள்ளினர். அதிரடிய ஆடிய இந்திய மகளிர் வெறும் 8 புள்ளி 2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றனர். நட்சத்திர வீராங்கனை ஷபாலி வர்மா 17 ரன்களும், ஜேமியா ரோட்ரிக்ஸ் 20 ரன்களும் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.