ETV Bharat / sports

"ரோஹித் சர்மா, விராட் கோலி பகுதி நேரமாக பந்து வீச வேண்டும்" - முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா கருத்து! - கிரிக்கெட்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பகுதி நேர பவுலராக செயல்பட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா, விராட் கோலி பகுதி நேரமாக பந்து வீச வேண்டும்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 7:57 PM IST

ஹைதராபாத்: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அகிய அணிகளுக்கு எதிராக அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி நாளை (அக். 29) இங்கிலாந்தை லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் எதிர்கொள்கிறது.

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின் போது, இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், காயத்தில் இருந்து மீண்டு வராததால், அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் விளையாடுவதற்கு வாய்ப்பு இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வலைபயிற்சியில் பந்து வீசிய ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் 6வது பந்து வீச்சாளராக செயல்பட்டு, ஹர்திக் பாண்டியாவின் இடத்தை நிரப்ப முடியும் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் அஜய் ராத்ரா கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "இந்திய அணியின் வீரர்கள் அனைவருமே அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

இந்திய அணியில் வீரர்கள் பேட்டிங், பில்டிங், மற்றும் பவுலிங் என அனைத்திலுமே சிறந்து விலங்குவதால், நடப்பாண்டு உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. கடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது அபார பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் பொருப்பான ஆட்டத்தை ஆடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் 6வது பவுலராக மட்டுமல்லாமல், ஒரு ஃபினிஷராகவும் செயல்பட்டு வருகிறார்.

வரும் போட்டிகளில் அவர் பங்கேற்காத பட்சத்தில், 6வது பவுலராக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பந்து வீச முற்பட வேண்டும். முன்னதாக இந்திய அணியில் யுவராஜ் சிங், விரேந்தர் சேவாக், சுரேஷ் ரய்னா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பகுதி நேரமாக பந்து வீசினர்.

அதனாலேயே அந்த நேரத்தில் 6வது பந்து வீச்சாளர் என்ற குறை இல்லாமல் இருந்தது. அதேநேரம் ரோஹித் சர்மா கேப்டனாக நன்றாக செயல்பட்டு வருகிறார். நல்ல முடிவுகளை எடுத்து வருகிறார். பேட்டிங்கிலும் அவரது பயணியை சிறப்பாக செய்து வருகிறார்" என்று ஜய் ராத்ரா தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: PAK VS SA Umpire Call Issue : பந்து ஸ்டம்ப்பை தாக்கினலே அது அவுட் தான?.. அது என்ன அம்பயர்ஸ் கால்?.. கொந்தளித்த ஹர்பஜன் சிங்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.