ETV Bharat / sports

முதலாவது டி20: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி - T20 ODI

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

முதலாவது டி20: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

author img

By

Published : Sep 29, 2022, 8:20 AM IST

மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி, நேற்று தனது முதல் டி20 போட்டியில் களம் கண்டது. இப்போட்டி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனால் பேட்டிங்கில் களம் கண்ட தென்னாப்பிரிக்க அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3, ஹர்ஷர் படேல் மற்றும் சாஹர் தலா 2 மற்றும் அக்‌ஷர் ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

107 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 16.4 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைசதம் கடந்த நிலையில், ஆட்டமிழக்காமல் விளையாடினர். அதேநேரம் கேப்டன் ரோகித் ஷர்மா ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க: இந்தியா த்ரில் வெற்றி - ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.