மெல்போர்ன்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 12 சுற்று நேற்று (அக். 22) சிட்னியில் தொடங்கியது. இன்றைய ஆட்டம் மெல்போர்னில் நடக்கிறது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதுகுறித்து ரோஹித் கூறுகையில், நாங்கள் முதலில் பந்துவீசப் போகிறோம். மேகமூட்டமான சூழ்நிலை பந்து வீசு நன்றாக இருக்கும். அதைப்பயன்படுத்திக்கொள்வோம். எங்களிடம் சிறந்த 7 பேட்டர்கள், 3 சீமர்கள் (பவுன்சர் பந்து வீச்சாளர்கள்), 2 ஸ்பின்னர்கள் உள்ளனர் என்றார். மறுப்புறம் பாபர் அசாம் கூறுகையில், இந்த பெரிய ஆட்டத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு முன்பான ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி உள்ளோம். எங்களிடம் 3 வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு ஸ்பின்னர்கள் வீச்சாளர்கள் உள்ளனர் என்றார்.
முதலில் களமிறங்கிய முகமது ரிஸ்வான் 12 பந்துகளில் 4 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் ரன்களின்றி டக் அவுட்டானார். 4.3 ஓவர்கள் முடிவில் 20 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது.
பாகிஸ்தான் (பிளேயிங் லெவன்): பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(கீப்பர்), ஷான் மசூத், ஹைதர் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், இப்திகார் அகமது, ஆசிப் அலி, ஷஹீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவூப், நசீம் ஷா.
இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக்(கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது - ஜெய் ஷா