ETV Bharat / sports

India Vs New Zealand : வெற்றி வாகைசூடுமா இந்தியா?.. 5வது வெற்றி யாருக்கு? இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதல்! - உலக கோப்பை கிரிக்கெட் இந்தியா நியூசிலாந்து

world cup cricket 2023 : தர்மசாலாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.

Etv bharat
Etv bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 6:01 AM IST

தர்மசாலா : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று தர்மசாலவில் நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இதில் இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் இந்திய அணி இதுவரை எதிர்கொண்ட அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியும் எதிர்கொண்ட 4 போட்டிகளிலும் வென்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

இதுவரை இரண்டு முறை உலக கோப்பைகளை வென்ற இந்திய அணி, இந்த முறை சொந்த மண்ணில் நடப்பதால் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முன்னைபுடன் விளையாடி வருகிறது. மறுப்பக்கம் கடந்த இரு சீசன்களாக (2015 மற்றும் 2019) இறுதி போட்டி வரை முன்னேறி தோல்வியை தழுவிய வேதனையுடனும், வெறியுடனும் இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து அணி களம் இறங்கி விளையாடி வருகிறது.

அதற்கு ஏற்றவாரு முதல் போட்டியில் இருந்தே வெறி கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி, இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று மிகுந்த பலத்துடன் காணப்படுகிறது. இந்திய அணியோ 2003ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இதுவரை நியூசிலாந்து அணியை வென்றது இல்லை என்ற மோசமான சாதனையுடன் தொடர்ந்து வருகிறது.

ஐசிசி உலக கோப்பை தொடரில் இதுவரை இந்தியா - நியூசிலாந்து அணிகள் 9 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் நியூசிலாந்து அணி 5 முறையும், இந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. 2003 ஆண்டுக்கு பிறகு ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறாமல் உள்ளது.

இன்றைய ஆட்டத்தில் அந்த தாகத்தை இந்திய அணி தீர்த்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் 5வது வெற்றிக்காக நியூசிலாந்து வீரர்களும் கடுமையாக உழைப்பார்கள் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :

இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன், முகமது சிராஜ், சூர்யகுமார் யாதவ், அல்லது முகமது ஷமி.

நியூசிலாந்து : டாம் லாதம் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட், டிம் சவுத்தி, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம்.

இதையும் படிங்க : IND VS NZ: இந்தியா - நியூசிலாந்து கடந்த வந்த பாதை! சவால் அளிக்கும் நியூசிலாந்து... சமாளிக்குமா இந்தியா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.