கொல்கத்தா: இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல்போட்டி இன்று(பிப்.16) தொடங்கியது.
முதலாவதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 41 பந்துகளில் 61 ரன்களை குவித்து, அணிக்கு வலுசேர்த்தார். அதேபோல கைல் மேயர்ஸ் 24 பந்துகளில் 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கீரன் பொல்லார்ட் 19 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், சாஹல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதில் ஹர்ஷல் படேல் பூரன் விக்கெட்டை வீழ்த்தியது ரன்கள் கட்டுப்படுத்த உதவியது.
இதையும் படிங்க: IN vs WI T20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு