அகமதாபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடுகிறது. முதலாவது டி20 போட்டி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி 3ஆம் தேதி நடந்தது. அதில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் 2ஆவது டி20 போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயில் நடந்தது. அதில், இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி டி20 தொடர் சமனில் உள்ளது.
இதனால் தொடரை கைப்பற்ற 3ஆவது டி20 போட்டியில் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன. இந்த போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மைதானத்தில் இன்றிரவு (ஜனவரி 7) 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இரண்டு அணிகளின் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்குப்பின் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் மோதுகின்றன.
ஒரு நாள் தொடரின் முதலாவது போட்டி ஜனவரி 10ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியிலும், இரண்டாவது போட்டி ஜனவரி 12ஆம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலும், மூன்றாவது போட்டி ஜனவரி 15ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் நடக்கிறது. இந்த தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணி டி20 தொடர்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் படேல். சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.
இலங்கை அணி டி20 தொடர்: தசுன் ஷனகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா (துணை கேப்டன்), சரித் அசலங்கா, அஷென் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, அவிஷ்கா பெர்னாண்டோ, சமிகா கருணரத்னே, லாகிரு குமாரா, தில்ஷன் மதுஷங்கா, குசால் மெண்டிஸ், பதும் நிசங்கா, பிரமோத் மதுஷான், பானுகா ராஜபக்ச, கசுன் ரஜிதா, சதீரா சமரவிக்ரம, மஹீஷ் தீக்ஷனா, நுவன் துஷாரா, துனித் வெல்லாலகே.
இதையும் படிங்க: மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்