ETV Bharat / sports

IND Vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது! - கிரிக்கெட் செய்திகள்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலியா
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 7:00 AM IST

மொஹாலி: ஐசிசி ஒருநாள் கோப்பை இன்னும் இரண்டு வாரங்களில் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றது. அந்த வகையில், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் விளையாடுகிறது. இந்த தொடர் போட்டியில் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.

மொஹாலியில் தொடங்கவுள்ள முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்த தொடரை முழுமையாக கைப்பற்றும் அணி ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி முன்னேறும். அதனால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் ஏதும் குறையாது.

இந்தியாவைப் பொறுத்தவரை, முதல் இரண்டு போட்டியில் கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். அணியில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு பதிலாக திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது இளம் வீரர்களான இவர்களுக்கு உலகக் கோப்பைக்கு முன்பாக ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காயத்தில் இருந்து நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் மீது ரசிகர்கள் இடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல், சுமார் 21 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் ரவிச்சந்திர அஸ்வின் திரும்பியுள்ளதால் அவரின் பந்து வீச்சின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை அவர்கள் இழந்ததால், ஐசிசி தரவரிசையில் சரிவைக் கண்டனர். இதனை மனதில் கொண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்குவார்கள்.

இந்திய அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் அணியில் இடம் பெற மாட்டார்கள் என அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அறிவித்துள்ளார். மேலும், இருவரும் காயத்திலிருந்து மீண்டு அடுத்த ஆட்டத்தில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகளில் இந்தியா சார்பில், ஷுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன்), திலக் வர்மா அல்லது வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விகீ), மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜாம்பா.

இதையும் படிங்க: ICC Ranking: இந்திய வீரர் முகமது சிராஜ் முதல் இடத்திற்கு முன்னேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.