திருவனந்தபுரம்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இத்தொடரின் 2வது போட்டி நாளை (நவ. 26) திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.
-
✈️ Touchdown Trivandrum!#TeamIndia are here for the 2⃣nd #INDvAUS T20I 👌👌@IDFCFIRSTBank pic.twitter.com/dQT4scn38w
— BCCI (@BCCI) November 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">✈️ Touchdown Trivandrum!#TeamIndia are here for the 2⃣nd #INDvAUS T20I 👌👌@IDFCFIRSTBank pic.twitter.com/dQT4scn38w
— BCCI (@BCCI) November 24, 2023✈️ Touchdown Trivandrum!#TeamIndia are here for the 2⃣nd #INDvAUS T20I 👌👌@IDFCFIRSTBank pic.twitter.com/dQT4scn38w
— BCCI (@BCCI) November 24, 2023
இதற்காக இரு அணி வீரர்களும் திருவனந்தபுரத்தை சென்றடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியை பெருத்தவரை முதல் போட்டியில் மிகவும் நெருக்கமான வெற்றியையே பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 208 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் பந்து வீச்சில் முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேலை தவிர்த்து மற்ற பந்துவீச்சாளர்களின் எக்கானமி செயல்படு என்பது 10க்கும் மேலேயே இருந்தது. குறிப்பாக, ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் இங்கிலிஸுக்கு எதிராக லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னாய் சற்று தடுமாறினார். ஆகையால் அவரது பந்து வீச்சின் அணுகுமுறையில் வித்தியாசம் தேவை.
பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிங்கு சிங் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், இஷான் கிஷன் பேட் செய்கையில் டாட் பால்களை குறைப்பதை நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். அது அணியின் வேகத்தை தக்கவைத்து கொள்ள உதவும்.
மறுபக்கம், ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை, பேட்டிங்கில் ஜோஸ் இங்கிலிஸ் அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி சர்வதேச முதல் சதத்தை பதிவு செய்தார். பெரிதாக ஸ்டீவ் ஸ்மித் ஓப்பனிங்கில் விளையாடியதில்லை என்றாலும், தனது பணியை சிறப்பாக செய்தார். அவரின் உறுதுணையே அந்த அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க உதவியது.
பந்து வீச்சில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மட்டுமே நன்றாக பந்து வீசினார். 4 ஓவர்களை வீசிய அவர் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினார். மற்ற பந்து வீச்சாளர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் படி தங்களது பணியை சிறப்பாக செய்யவில்லை. ஆகையால் இரு அணிகளுமே தங்களது பந்து வீச்சை முன்னேற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மேலும், ஆஸ்திரேலிய வீரர் தன்வீர் சங்காவுக்குப் பதிலாக லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பாவை நாளைய (நவ. 26) ஆட்டத்தில் களம் இறக்க ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. போட்டி நடைபெறும் திருவனந்தபுரம் மைதானத்தில் மழைக்கான வாய்ப்பு சற்று அதிகமாகவே காணப்படுவதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
இரு அணி வீரர்கள் பட்டியல்:
இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விகீ), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், சிவம் துபே, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார்.
ஆஸ்திரேலியா: மேத்யூ வேட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆரோன் ஹார்டி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், சீன் அபோட், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா.
இதையும் படிங்க: “ஷமி அருவறுக்கத்தக்க மனிதர், அவருடைய வலையில் நான் விழமாட்டேன்” முன்னாள் மனைவி ஹசின் ஜஹான்