ETV Bharat / sports

வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோர் - இந்திய வீரர்களை கிண்டலடித்த சேவாக் - 36 ரன்களில் இந்திய பேட்ஸ்மேன்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில், இந்திய வீரர்களின் பேட்டிங் வரிசையை கிண்டலடிக்கும் வகையில் வீரேந்திர சேவாக் ட்வீட் செய்துள்ளார்.

Cricket
Cricket
author img

By

Published : Dec 19, 2020, 8:00 PM IST

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாறு காணாத தோல்வி அடைந்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்தனர். இந்திய வீரர்களின் மோசமான ஆட்டத்தை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்கள் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக்கும் இந்திய அணியை கிண்டலடிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், இந்த போட்டியில் இந்திய வீரர்கள் எடுத்த ரன்களை வரிசைப்படுத்தி, (49204084041) இது ஞாபகத்தில் வைக்க வேண்டிய ஓடிபி எண் அல்ல, மறக்க வேண்டிய ஓடிபி என்று பதிவிட்டுள்ளார்.

வீரேந்திர சேவாக் ட்விட்டர் பதிவு
வீரேந்திர சேவாக் ட்விட்டர் பதிவு

இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டத்தை இழந்து பெவிலியின் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய அணியின் மோசமான தோல்வி - அனுஷ்கா, கோலியை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.