நேற்றுடன் ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கபதற்காக இந்திய அணியினர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளனர். இதில் ஐபிஎல் தொடரில் ஆடாத வீரர்களான புஜாரா, விஹாரி ஆகியோரும் இந்திய அணியோடு இணைந்துள்ளனர். பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இணைந்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தரையிறங்கியதும், அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
ஆஸி. சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது.
இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவ. 27ஆம் தேதி தொடங்கவுள்ளது. டி20 தொடர் டிச. 4ஆம் தேதியும், டெஸ்ட் தொடர் டிச. 17ஆம் தேதியும் தொடங்கவுள்ளது.
-
#TeamIndia is BACK!
— BCCI (@BCCI) November 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let's embrace the new normal 💪#AUSvIND pic.twitter.com/csrQ3aVv21
">#TeamIndia is BACK!
— BCCI (@BCCI) November 11, 2020
Let's embrace the new normal 💪#AUSvIND pic.twitter.com/csrQ3aVv21#TeamIndia is BACK!
— BCCI (@BCCI) November 11, 2020
Let's embrace the new normal 💪#AUSvIND pic.twitter.com/csrQ3aVv21
இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகலிரவு போட்டியாகவும், இரண்டாவது போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாகவும் நடக்கவுள்ளது. இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாகும்.
இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியோடு கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பவுள்ளார். இதனால் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு ரஹானே கேப்டனாக செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் ஓகே... ஆஸ்திரேலிய தொடரில் சாதிப்பாரா பும்ரா?