ETV Bharat / sports

ஆஃப் ஃபீல்டில் கோலி வேறுரகம்: ஐபிஎல் நினைவை பகிறும் ஆடம் ஸம்பா

author img

By

Published : Nov 23, 2020, 7:46 AM IST

கிரிக்கெட் களத்தில் பார்க்கும் விராட் கோலிக்கும், சொந்த வாழ்வில் பார்க்கும் கோலிக்கும் மலையளவு வித்தியாசம் உள்ளதாக ஆஸி. சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா தெரிவித்துள்ளார்.

kohli-is-not-what-you-see-on-cricket-field-he-is-chilled-out-guy-zampa

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் நவ.27ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி தொடர் குறித்தும், விராட் கோலி பற்றியும் ஆடம் ஸம்பா மனம் திறந்துள்ளார்.

அதில், ''ஐபிஎல் தொடருக்காக அமீரகம் சென்றபோது, நான் எனது ஓய்வறையில் இருந்தேன். அப்போது திடீரென எனது அலைபேசிக்கு ஒரு நம்பரில் இருந்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது. எனக்கு யாருடைய நம்பர் என்று தெரியவில்லை. பின்னர் தான் தெரிந்தது அது விராட் கோலியின் நம்பர் என்று.

பின்னர் ஒரு உணவகம் சென்றேன். அங்கு அவர் இருந்தார். எனக்கு அவரை பெரிதாக தெரியாது. ஆனால் நாங்கள் பல நாள்களாக நண்பர்களாக இருந்தது போல பேசினோம்.

நிச்சயம் அவர் கிரிக்கெட் களத்தில் பார்ப்பவர் மட்டும் இல்லை. அவர் எப்போதும் கிரிக்கெட் களத்திலும், பயிற்சியிலும் ஒரு எனர்ஜியை உருவாக்குகிறார். அவர் எப்போதும் போட்டியை விரும்புபவர். அதேபோல் தோல்வியடைவதை வெறுப்பவர். அதனால் தான் அவரது அக்ரஸிவ்னெஸ் வெளியில் அதிகமாக தெரிகிறது.

கோலி
கோலி

ஆனால் கிரிக்கெட் களத்திற்கு வெளியில், கோலி வேறுரகம். சாதாரணமாக யூ ட்யூப் வீடியோக்களை பார்த்து மிகவும் சத்தமாக சிரிக்கக் கூடியவர்.

காஃபி, பயணம், உணவு என ஏராளமானவற்றைப் பற்றி பேசக் கூடியவர். அதிகமாக கலாசாரத்தை மதிப்பவர். ஒருநாள் இரவில் என்னிடம் அவர் நேபாளம் சென்றதைப் பற்றி பேசினார். அதேபோல் காஃபி மெஷின் பற்றி எப்போதும் பேசுவார்.

நான் அவரை 7 முறை வீழ்த்தியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் அவர் என்னை எதிர்த்து ரன்களையும் எடுத்துள்ளார். விராட் கோலியை எதிர்த்து பந்துவீச ஆவலாக இருக்கிறேன்'' என்றார்.

மேலும், “ஆஃப் ஃபீல்டில் கோலி வேறுரகம்” என்றும் ஆடம் ஸம்பா கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எந்த வரிசையிலும் பேட்டிங் செய்ய தயாராகவுள்ளேன் - ரோஹித் சர்மா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.