இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக ஆடிய சிராஜ், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
பொருளாதார ரீதியாக சமூகத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த சிராஜ், தனக்கு கிடைத்த ஆதரவினைக் கொண்டு இந்திய அணி வரை முன்னேறியவர். ஒவ்வொரு முறை சிராஜின் பந்துவீச்சு பேசப்படும்போதும், அவர் தனது தந்தையைப் பற்றி பேசுவார்.
சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய சிராஜின் வெற்றியை அவரது குடும்பத்தினர் பெரியளவில் கொண்டாடினர். இந்தநிலையில் நுரையீரல் பிரச்னை காரணமாக சிராஜின் தந்தை கோஸ் உயிரிழந்தார்.
இதைப்பற்றி ஆர்சிபி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை பதிவிட்டுள்ளது. மேலும் தந்தையின் இறுதி சடங்கில் சிராஜ் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேகேஆர் கோட்டையை தரைமட்டமாக்கிய சிராஜ், சஹால்!