ETV Bharat / sports

இந்திய அணியின் மோசமான தோல்வி - அனுஷ்கா, கோலியை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

author img

By

Published : Dec 19, 2020, 7:25 PM IST

Updated : Dec 19, 2020, 7:31 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வி அடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மாவை ட்ரோல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

Anushka Sharma
Anushka Sharma

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்வியின் எதிரொலியாக நெட்டிசன்கள் பலரும் கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவை ட்ரோல் செய்து பதிவிட்டு வருகின்றனர். அனுஷ்கா சொன்னதால்தான் விராட் கோலி ஆட்டத்தை சீக்கிரம் முடிந்துவிட்டு கிளம்புகிறார் போன்ற பதிவுகளை பதிவிட்டனர்.

இது ஒருபுறம் இருப்பினும், அனுஷ்காவிற்கு ஆதரவு தெரிவித்து பலரும் ட்வீட் செய்துவருகின்றனர். இதனால் அனுஷ்கா ஷர்மா குறித்த பதிவுகள் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்ய தீர்மானித்தது. முதல் இன்னிங்சில் 244 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது. இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

பின்னர் 90 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸில் இவ்வளவு குறைவான ரன்களில் எடுத்து தோல்வி அடைந்தது இதுவே முதல்முறை ஆகும்.

இதையும் படிங்க: கோலி தலைமையிலான இந்திய அணியின் சாதனையும், சறுக்கலும்!

Last Updated : Dec 19, 2020, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.