இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நவ.27ஆம் தேதி தொடங்கி ஜன.19ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் உள்ள வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, வடக்கு பகுதிகள், தெற்கு ஆஸ்திரேலியா எல்லைகள் ஆகியவற்றில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு வரும் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ''கரோனா தொடர்பான சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதனால் டிம் பெய்ன் தன்னைத் தானே தனிமைப்படுத்தக் கொண்டுள்ளார்'' என்றார்.
இதனிடையே அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த ஆஸ்திரேலியா நிர்வாகம், இன்னும் அதைப்பற்றி முடிவு செய்யப்படவில்லை. மேலும் முதல் டெஸ்ட் போட்டிக்கு இன்னும் ஒரு மாதம் இடைவெளி இருப்பதால் பயப்பட தேவையில்லை என்றனர்.
மேலும் தெற்கு ஆஸ்திரேலியாவில் ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் பங்கேற்ற ஆஸி. கேப்டன் டிம் பெய்ன், மேத்யூ வேட் ஆகியோர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆஸி., மட்டுமல்ல, யாருக்கும் வெற்றி அவ்வளவு எளிதாக கிடைக்காது: புஜாரா