அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. லீக் மற்றும் அரைஇறுதி சுற்று நிறைவு பெற்ற நிலையில், அகமதாபாத்தில் இன்று (நவ. 19) நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொண்டன.
விறுவிறுப்பாக நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக வெற்றிகரமாக நிறைவு செய்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக உலக கோப்பையை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய ஒட்டுமொத்தமாக 98 விக்கெட்டுகளை கைப்பற்றிய உள்ளது. இதற்கு முன் கடந்த 2007ஆம் அண்டு உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 97 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தது. அதுவே ஒரு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அதிகபட்ச விக்கெட் வீழ்ச்சியாக இருந்தது.
தற்போது அந்த சாதனையை நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி முறியடித்து உள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத் ஷமி மட்டும் நடப்பு சீசனில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதில் 3 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய நிகழ்வும் அடங்கும்.
அதேபோல், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் பும்ரா 5வது இடத்தில் உள்ளார். நடப்பு சீசனில் எதிரணியை 200 ரன்களுக்குள் 5 முறை இந்திய அணி கட்டுப்படுத்தி உள்ளது.
அதில் சுழற்பந்து வீச்சாளர்களின் பங்கும் அடங்கும். ரவீந்திர ஜடேஜா 16 விக்கெட்டுகளும், குல்திப் யாதவ் 15 விக்கெட்டுகளும் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வீழ்த்தி உள்ளனர்.
இதையும் படிங்க : உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து! இந்திய வீரர்களுக்கு ஆறுதல்!