ETV Bharat / sports

நியூசிலாந்துக்கு 385 ரன்கள் இலக்கு - ரோகித், சுப்மான் சதம் விளாசல்.. - இந்தியா நியூசிலாந்து ஒருநாள் கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் விளாசியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் சதம் விளாசினர்.

ரோகித்
ரோகித்
author img

By

Published : Jan 24, 2023, 5:34 PM IST

இந்தூர்: டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 12 ரன்களிலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்று தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். 25 ஒவர்களை தாண்டி நிலைத்து நின்று ஆடிய ரோகித் சர்மா தனது 30 சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்த கையோடு ரோகித் சர்மா, பிரெஸ்வெல் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.

மறுபுறம் இரட்டை சதம் நாயகன் சுப்மான் கில் மீண்டும் ஒரு சர்வதேச சதத்தை பதிவு செய்தார். 112 ரன்கள் குவித்த சுப்மான் கில், பிளேர் டிக்னர் பந்து வீச்சில் கான்வாயிடம் கேட்ச்சாகி அவுட்டானார். தொடர்ந்து இந்திய அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

முன்னாள் கேப்டன் விராட் கோலி 36 ரன், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 17 ரன், அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 14 ரன்கள் என் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். முதல் 25 ஓவர்களில் இந்திய அணியின் ஆட்டத் திறனை பார்க்கையில் 450 ரன்களுக்கு மேல் அடிக்க வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.

ஆனால் அடுத்த 25 ஓவர்களில் தலைகீழ் நிலைமையாக மாறியது. இறுதியில் ஹர்த்திக் பாண்டியா மட்டும் 54 ரன்கள் குவித்து ஆறுதல் அளிக்கும் வகையில் விளையாடினார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் தவறான ஷாட்டுகளை அடித்து இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தது, ரன் குவிப்பில் பின்னடைவை ஏற்படுத்தியது.

நியூசிலாந்து அணியில் ஜேக்கப் டூபி, பிளேர் டிக்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். 386 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து வீரர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: டெல்லி மேயர் தேர்தலில் தொடர் இழுபறி.. பாஜக - ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் கடும் அமளி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.