ETV Bharat / sports

India Vs England : இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்! அஸ்வினுடன் களமிறங்கும் இந்தியா? - உலக கோப்பை கிரிக்கெட் 2023

World Cup 2023: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வரும் 29ஆம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இடம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ashwin
Ashwin
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 1:12 PM IST

லக்னோ : 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.

நடப்பு சீசன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாதி கிணற்றை கடந்து உள்ள நிலையில், அடுத்த சுற்று வாய்ப்பில் அணிம்கள் நீடிக்க இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்திய அணி எதிர்கொண்ட 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டு புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

வரும் 29ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் 29வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து நடப்பு சீசனில் படுமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களில் 3ல் தோல்வியை தழுவி உள்ள இங்கிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி வரும் அனைத்து ஆட்டங்களில் வென்றால் கூட அது இங்கிலாந்து அணிக்கு போதாது எனக் கருதப்படுகிறது. இந்நிலையில், வரும் 29ஆம் தேதி லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணியை இங்கிலாந்து எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கடைசியாக கடந்த 22ஆம் தேதி தர்மசாலாவில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இருந்தது. தர்மசாலா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுக்கும் என்பதால் இந்திய அணி பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது.

அதேநேரம் இங்கிலாந்துடன் விளையாட உள்ள லக்னோ மைதானம் சுழற்பந்துக்கு நன்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடிய மைதானம் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த ஆட்டத்தில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

அஸ்வின், சுழற்பந்துவீச்சாளர் மட்டுமின்றி 8வது வரிசையில் களமிறங்கி விளையாடக் கூடிய ஆல்-ரவுண்டர். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் குல்தீப் யாதவ் 73 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொத்தம் 10 ஓவர் பந்து வீசிய யாதவ் 8 மற்றும் 10வது ஓவரில் ரன்களை வாரிக் கொடுத்தார்.

அஸ்வினை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் பேட்டிங்கில் நல்ல பங்களிப்பு அளிக்கக் கூடிய வீரர் என்பதால் இருவரின் இருப்பு என்பது அணியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அடுத்த இரண்டு ஆட்டங்களில் அல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கலந்து கொள்ள முடியாது சூழல் நிலவுவதாக கூறப்படும் நிலையில், கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டு சாதிக்க வேண்டிய சூழலில் சூர்யகுமார் யாதவ்வும் உள்ளார்.

இதையும் படிங்க : Net Run Rate: நெட் ரன்ரேட் என்றால் என்ன?.. எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.