ஹராரே: கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் 189 ரன்களை இலக்கை விக்கெட் இழப்பின்றி துரத்திய இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரோ விளையாட்டு மைதானத்தில் இன்று (ஆக. 19) தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல், ஜிம்பாப்வே அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
இந்திய அணி தரப்பில் தீபக் சஹாருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஜிம்பாப்வே அணியில் தடிவானாஷே மருமணி, ரிச்சர்ட் ங்கராவா ஆகியோருக்கு பதிலாக கைடானோ, தனகா சிவாங்கா சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியாவும், அதற்கு முட்டுக்கட்டைப் போட ஜிம்பாப்வே அணி வீரர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
-
A look at our Playing XI 👇
— BCCI (@BCCI) August 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
One change for #TeamIndia. Shardul Thakur comes in place of Deepak Chahar.
Live - https://t.co/6G5iy3rRFu #ZIMvIND pic.twitter.com/JAmJ6HxmGu
">A look at our Playing XI 👇
— BCCI (@BCCI) August 20, 2022
One change for #TeamIndia. Shardul Thakur comes in place of Deepak Chahar.
Live - https://t.co/6G5iy3rRFu #ZIMvIND pic.twitter.com/JAmJ6HxmGuA look at our Playing XI 👇
— BCCI (@BCCI) August 20, 2022
One change for #TeamIndia. Shardul Thakur comes in place of Deepak Chahar.
Live - https://t.co/6G5iy3rRFu #ZIMvIND pic.twitter.com/JAmJ6HxmGu
இந்தியா அணியின் வீரர்கள் பட்டியல்: ஷிகர் தவான், சுப்மான் கில், இஷான் கிஷன், கே.எல். ராகுல்(கே), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன்(வி.கீ), அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
ஜிம்பாப்வே அணியின் வீரர்கள் பட்டியல்: இன்னசென்ட் கையா, டகுட்ஸ்வானாஷே கைடானோ, வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகப்வா(கே & வி.கீ), ரியான் பர்ல், லூக் ஜாங்வே, பிராட் எவன்ஸ், விக்டர் நியுச்சி, தனகா சிவாங்கா.
இதையும் படிங்க: இந்திய கிளப் அணிகளுக்கு திட்டமிட்ட போட்டிகளில் பங்கேற்க அனுமதி வேண்டும்... ஃபிஃபாவிடம் மத்திய அரசு கோரிக்கை...