ETV Bharat / sports

1st T20 கிரிக்கெட் - இலங்கையை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி...

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியசத்தில் திரில் வெற்றி பெற்று தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

author img

By

Published : Jan 3, 2023, 11:04 PM IST

இந்தியா அபார வெற்றி
இந்தியா அபார வெற்றி

மும்பை: இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், சுப்மான் கில் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.

இந்திய வீரர் சுப்மான் கில் 7 ரன்கள் எடுத்த நிலையில், தன் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவும் 7 ரன்கள் மட்டும் சேர்த்து ஏமாற்றம் அளித்தார். ஒருபுறம் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷன் போராட மறுபுறம் வந்த வீரர்கள் ஒற்றை இலக்கில் நடையைக் கட்டினர்.

தொடக்க வீரர் இஷான் தன் பங்கிற்கு 37 ரன்கள் சேர்த்து நடையைக் கட்டினார். இலங்கை பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சில் இந்திய வீரர்கள் சற்று தளர்ந்து தான் போயினர்.

மறுபுறம் கேப்டன் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ஹர்த்திக் பாண்ட்யா இந்த முறை 27 பந்துகளில் 29 ரன்கள் மட்டும் சேர்த்து வெளியேறினார். இறுதியாகக் களமிறங்கிய தீபக் ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் அதிரடியாக ஆடி கடைசிக் கட்டத்தில் இந்திய அணியின் ஸ்கோரை கவுரவ நிலைக்கு உயர்த்தினர்.

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 162 ரன்கள் சேர்த்தது. தீபக் ஹூடா 41 ரன்களும், அக்சர் பட்டேல் 31 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

163 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தது. தொடக்க வீரர் குசல் மெண்டிசை தவிர்த்து மற்ற வீரர்கள் விரைவாக அவுட்டாகி வேகமாக நடையைக் கட்டினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தசுன் சனகா கடைசி வரை போராடி 45 ரன்கள் சேர்த்தார். இந்திய வீரர்களின் நேர்த்தியான பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இலங்கை வீரர்கள் விக்கெட் அணிவகுப்பு நடத்தினர்.

அடுத்தடுத்து வந்த இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் அந்த அணி இழந்தது.

இறுதியில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் டி20 தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனே மைதானத்தில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: 21 வயது இளம்பெண் ஐ.சி.சி.யின் பயிற்சியாளராக தேர்வாகி சாதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.