கொழும்பு (இலங்கை): இந்தியா, இலங்கை அணிக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று (ஜூலை 18) நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டீசன்ட்டான தொடக்கம்
இதையடுத்து, இலங்கை அணிக்கு அவிஷ்கா - பானுகா இணை சிறந்த தொடக்கத்தை அளித்தது. புவனேஷ்வர், தீபக் சஹார் இருவரின் ஓப்பனிங் ஸ்பெல்லை இவ்விருவரும் நிதானமாக கையாண்டனர். இந்த இணையைப் பிரிக்க 10ஆவது ஓவரில் சஹால் களமிறக்கப்பட்டார்.
அதற்கு பலனாக அவிஷ்கா 32 (35) ரன்களில் சஹாலிடம் வீழ்ந்தார். அடுத்த களம்கண்ட அறிமுக வீரர் பானுகா ராஜபக்ஷ 24 (22) ரன்களிலும், மினோத் பானுகா 27 (44) ரன்களிலும் குல்தீப் யாதவின் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் டி சில்வா 14 (27) ரன்களில் நடையைக்கட்ட, இலங்கை 117 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அசலங்கா 38 (65), ஹசரங்கா 8 (7) ரன்களில் தீபக் சஹாரிடமும், கேப்டன் ஷனகா 39 (50) சஹாலிடமும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதிநேரத்தில் சாமிகா கருணாரத்ன சற்று கைகொடுக்க, இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் எடுத்தது.
கடைசி நேரக் காப்பாளன்
சாமிகா கருணாரத்ன 43 (35) ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி கடைசி 10 ஓவர்களில் 74 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தரப்பில் தீபக் சஹார், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பாண்டியா சகோதரர்கள் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ப்ரித்வி "ஷோ"
இதன்மூலம், 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம்கண்டது. இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா, கேப்டன் ஷிகார் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பேட்டிங் பவர் பிளேவை தனதாக்கி கொண்ட ஷா, தொடர்ச்சியாக பவுண்டரிகளை சிதறவிட்டார். 24 பந்துகளில் 9 பவுண்டரிகள் உள்பட 43 ரன்களை குவித்த ஷா, டி சில்வா பந்துவீச்சில் அவிஷ்காவிடம் கேட்ச் கொடுத்து தனது முதல் அரைசதத்தை தவறவிட்டார்.
-
India go 1-0 up 👊
— ICC (@ICC) July 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Skipper Shikhar Dhawan scores an unbeaten 86 as the visitors win with 80 deliveries remaining. #SLvIND | https://t.co/trHbMrCpo8 pic.twitter.com/3rNnhBzMwt
">India go 1-0 up 👊
— ICC (@ICC) July 18, 2021
Skipper Shikhar Dhawan scores an unbeaten 86 as the visitors win with 80 deliveries remaining. #SLvIND | https://t.co/trHbMrCpo8 pic.twitter.com/3rNnhBzMwtIndia go 1-0 up 👊
— ICC (@ICC) July 18, 2021
Skipper Shikhar Dhawan scores an unbeaten 86 as the visitors win with 80 deliveries remaining. #SLvIND | https://t.co/trHbMrCpo8 pic.twitter.com/3rNnhBzMwt
மிரட்டிய இஷான்
தன்னுடைய அறிமுகப் போட்டியின், முதல் இரண்டு பந்துகளை சிக்ஸர், பவுண்டரி என்று பறக்கவிட்ட இஷான் கிஷன், சிறப்பான தொடக்கத்தை பெற்றார். அதன்பின்னரும் அதிரடி காட்டிய இஷான், 32 பந்துகளில் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்தினார்.
தவான் பொறுமைக்காட்ட, மறுபுறத்தில் இஷான் அதிரடி காட்ட முனைந்தார். துர்திஷ்டவசமாக, இஷான் 59 (42) ரன்களில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் இன்னிங்ஸ்
பின்னர், ஜோடி சேர்ந்த தவான்-பாண்டே இணை பொறுமையாக ஆடி ஸ்கோரை சீராக உயர்த்தியது. தவான், தான் சந்தித்த 61ஆவது பந்தில், ஒருநாள் அரங்கில் தன்னுடைய 33ஆவது அரைசதத்தை பதிவு செய்தார்.
பின்னர், மனிஷ் பாண்டே 26 (40) ரன்களில் வெளியேற சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். இதன்பின்னர், தவானும், சூர்யகுமாரும் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
தொடரும் வெற்றி
-
A comprehensive 7-wicket win for #TeamIndia to take 1-0 lead in the series🙌
— BCCI (@BCCI) July 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
How good were these two in the chase! 👏👏
8⃣6⃣* runs for captain @SDhawan25 👊
5⃣9⃣ runs for @ishankishan51 on ODI debut 💪
Scorecard 👉 https://t.co/rf0sHqdzSK #SLvIND pic.twitter.com/BmAV4UiXjZ
">A comprehensive 7-wicket win for #TeamIndia to take 1-0 lead in the series🙌
— BCCI (@BCCI) July 18, 2021
How good were these two in the chase! 👏👏
8⃣6⃣* runs for captain @SDhawan25 👊
5⃣9⃣ runs for @ishankishan51 on ODI debut 💪
Scorecard 👉 https://t.co/rf0sHqdzSK #SLvIND pic.twitter.com/BmAV4UiXjZA comprehensive 7-wicket win for #TeamIndia to take 1-0 lead in the series🙌
— BCCI (@BCCI) July 18, 2021
How good were these two in the chase! 👏👏
8⃣6⃣* runs for captain @SDhawan25 👊
5⃣9⃣ runs for @ishankishan51 on ODI debut 💪
Scorecard 👉 https://t.co/rf0sHqdzSK #SLvIND pic.twitter.com/BmAV4UiXjZ
இதன்மூலம் இந்திய அணி 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்களை எடுத்தது. ஷிகார் தவான் 84 (93) ரன்களுடனும், சூர்யகுமார் 30 (18) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் டி சில்வா 2 விக்கெட்டுகளையும், சண்டகன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்தியா 1 -0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மண்ணில் ஒருநாள் போட்டிகளில் தோல்வியே தழுவியது இல்லை என்ற பெருமையை இந்திய அணி தக்கவைத்துள்ளது.
ஆட்டநாயகன்: பிருத்வி ஷா
இதையும் படிங்க: IND vs SL: இலங்கை 262 குவிப்பு; பிருத்வி ஷா அதிரடி தொடக்கம்