ETV Bharat / sports

IND vs SL 2nd T20: இந்தியாவின் அடுத்த வைட் வாஷ் இலங்கை? - இந்திய இலங்கை இன்றைய ஆட்டம்

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை(பிப்.26) தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

ind-vs-sl-2nd-t20i-preview
ind-vs-sl-2nd-t20i-preview
author img

By

Published : Feb 25, 2022, 3:14 PM IST

தர்மசாலா: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. அந்த வகையில் நேற்று(பிப்.24) லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் முதல் டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியா அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது.

20 ஓவர்கள் முடிவில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை குவித்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டங்களில் தடுமாறிய இஷான் கிஷன், இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 56 பந்துகளில் 89 ரன்களை குவித்தார். மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா 44 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 57 ரன்கள் என்று வலுவான ஓப்பனிங் இந்திய அணியின் கைவசம் உள்ளது.

இதற்கு மாறாக இலங்கை அணி முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டத்தை தொடங்கியது. எவ்வளவு போராடியும் இலங்கை அணி வீரர்களால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனிடையே இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், மேற்கிந்திய தீவுகள் அணி போலவே இலங்கை அணியும் வைட் வாஷ் செய்யப்பட்ட அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் இலங்கை அணி வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே நாளை தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இரண்டு அணிகளும் முழு மூச்சில் ஆட்டத்தை வெளிபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், அவேஷ் கான். முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.

இலங்கை: தசுன் ஷானக(கேப்டன்), பதும் நிசங்க, கமில் மிஸ்ரா, சரித் அசலங்கா, தினேஸ் ஜந்திமல், ஜனித் லியனகே, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த ஜமீரா, பிரவீன் ஜெயவிக்கிரம, ஜெஃப்ரி வான்டர்சே, லஹிரு குமர, தனுஷ்க குணதிலக, பினுரா பெர்னாண்டோ, ஆஷியன் டேனியல், ஷிரான் பெர்னாண்டோ.

இதையும் படிங்க: IND vs SL: இலங்கை அணியை 137 ரன்களில் சுருட்டிய இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.