ஹைதராபாத்: ஐஐசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அணிகள் முதல் 2 இடங்களுக்கு முன்னேறியுள்ள நிலையில், 3 மற்றும் 4ம் இடங்களைப் பிடிக்க ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணி அடுத்தடுத்து வீரர்களை இழந்து தடுமாறி வருகிறது. முன்னதாக கேப்டன் கேன் வில்லியம்சன், மார்க் சேப்மேன், மற்றும் ஃபர்குசன் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை அந்த வரிசையில் தற்போது மாட் ஹென்றி இணைந்துள்ளார்.
இதனால் நாளை(நவ.04) நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் அவர் இடம் பெற மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நியூசிலாந்து அணி பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறுகையில் “ மாட் ஹென்றிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவரின் ஸ்கேன் ரிப்போர்டுக்காக காத்திருக்கிறோம்.
இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் தான். மாட் ஹென்றி அணிக்காகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். இதனால் வரவிருக்கும் போட்டிகளில் அவருக்குப் பதிலாக கைல் ஜேமிசன் அணியில் இணையவுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கு பெற தயராக உள்ளார்” எனத் தெரிவித்தார்.
வாழ்வா சாவா போட்டி: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆரம்பத்தில் அதிரடி காட்டி 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி கடந்த 3 போட்டிகளில் தேல்விய சந்தித்துள்ளது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இதனால் நாளை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 35 லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும். இந்நிலையில் நியூசிலாந்து அணியில் முக்கியமான வீரர்கள் விலகி இருப்பது அந்த அணிக்குப் பின்னடைவைத் தருமா அல்லது தொடர் தோல்வியிலிருந்து மீண்டு அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
இதையும் படிங்க: AFG vs NED: டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங் தேர்வு