ETV Bharat / sports

பிறந்தநாளன்று சச்சினின் சாதனையை சமன் செய்த கிங் கோலி.. சச்சின் சொன்ன அந்த வார்த்தை..! - sachin vs kohli

Virat kohli new record: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்துள்ளார்.

தனது பிறந்தநாளன்று மாஸ்டர் சாதனையை சமன் செய்த கிங் கோலி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 7:46 PM IST

கொல்கத்தா: இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் விராட் கோலி இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் சதமடித்துள்ளார். இந்த சதம் மூலம் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்த (49) சாதனையைச் சமன் செய்துள்ளார். இன்று விராட் கோலியின் 35வது பிறந்தநாள் என்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

  • Well played Virat.
    It took me 365 days to go from 49 to 50 earlier this year. I hope you go from 49 to 50 and break my record in the next few days.
    Congratulations!!#INDvSA pic.twitter.com/PVe4iXfGFk

    — Sachin Tendulkar (@sachin_rt) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விராட் கோலி தனது 49வது ஒருநாள் சதத்தை 277 இன்னிங்ஸில் அடித்துள்ளார். அதே வேளையில் சச்சின் டெண்டுல்கர் தனது 49வது சதத்தை 463வது இன்னிங்ஸில் அடித்துள்ளார். மேலும் இந்த பட்டியலில் ரோகித் சர்மா 31 சதங்களுடன் 3வது இடத்தில் உள்ளார். விராட் கோலி இன்று மேலும் பல சாதனைகளை முறியடித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இன்று சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி 1573 ரன்களுடன் 3வது இடம் பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இடத்தில் சச்சின் 2278 ரன்களுடன் உள்ளார். மேலும் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (6000) எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் சச்சின் (6976) உள்ளார்.

இன்று சதமடித்தது குறித்துப் பேசிய விராட் கோலி, “போட்டியில் 10வது ஓவருக்கு பிறகு பந்து மெதுவாக வந்தது. ஆடுகளமும் மெதுவாக இருந்தது. இதனால் நானும் மற்ற பேட்ஸ்மென்களும் கடைசி வரை நின்று பொறுமையாக ஆட வேண்டும் என அணி நிர்வாகம் எங்களிடம் கூறினர்.” என்றார்.

விராட் கோலி சாதனை குறித்து சச்சின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் “நான் 49வது சதத்திலிருந்து 50வது சதம் அடிக்க ஒரு வருடம் எடுத்துக் கொண்டேன். நீங்கள் (கோலி), அடுத்த சில நாட்களில் 50வது சதம் அடித்து எனது சாதனையை முறியடிப்பீர்கள் என நம்புகிறேன், வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார். விராட் கோலி தனது பிறந்தநாளன்று சச்சின் சாதனையை முறியடித்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: IND VS SA Live Score: பந்து வீச்சில் கலக்கும் இந்தியா.. அடுத்தடுத்து விக்கெட்களை இழக்கும் தென் ஆப்பிரிக்கா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.