அகமதாபாத்: ஐசிசி உலக கோப்பை தொடரின் 12வது லீக் ஆட்டமானது அகமதாபாத நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் டாஸ் போடப்பட்டது. அதில் தோல்வியடைந்த பாபர் அசாம் பேசுகையில், நாங்கள் டாஸில் வெற்றி பெற்று இருந்தால் பந்து வீச்சை தான் தேர்வு செய்திருப்போம் என வருத்துடன் தெரிவித்தார். அந்த வருத்ததுடனேயே பாகிஸ்தானை பேட் செய்ய சொன்னார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் நிதானமான ஆட்டத்தையே வெளிபடுத்தினர்.
தொடக்கத்தில் நிதானம், மிடில் ஓவர்களில் சீராக ரன்களை சேர்ப்பது, அதன் பின் இறுதியில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பது. இது தான் பாகிஸ்தானின் பாணி. அதன்படியே அவர்கள் தொடங்கினர். சிராஜ், புப்ராவாலேயே விக்கெட்களை வீழ்த்த முடியவில்லையே என நினைத்த நேரத்தில், முதல் விக்கெட்டாக ஷபீக்பை வீழ்த்தி விக்கெட் கணக்கை தொடங்கினார் சிராஜ்.
அடுத்த சில ஓவர்களிலேயே ஹர்திக் பாண்டியா, இமாம் உல் ஹக்கை வீழ்த்தி வெளியேற செய்தார். ஒரு பக்கம் ரன்களும் ஒரு பக்கம் விக்கெட்டை இழக்க கூடாது என்ற எண்ணத்திலும் பொருமையாக விளையாடி கொண்டிருந்த இமாம், ஹர்திக் பாண்டியா வீசிய பந்தை அடிக்க முயன்று எட்ஜ் ஆகி கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து பாபர் அசாம் - ரிஸ்வான் கூட்டணி கைக்கோர்த்தது. 13வது ஓவரில் சேர்ந்த இந்த கூட்டணி க்ளாஸாக விளையாடி 30வது ஓவர் வரை களத்தில் இருந்து ரன்களை குவித்து வந்தது. கிட்டதட்ட இந்திய அணியின் பவுலர்கள் அனைவருமே இந்த இடைப்பட்ட ஓவர்களை வீசினர். அவர்களை நிதானமாக கையாண்டு ஓவர்களுக்கு 4, 5 என்ற கணக்கில் சீராக ரன்களை குவித்தது வந்தது. இப்படி தங்களது இணையையும் பலப்படுத்தி, அணிக்கும் ரன்களை சேர்த்து வந்த இந்த கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள்.
தொடக்க வீரரை வீழ்த்தி கணக்கை தொடங்கி வைத்த சிராஜே இதையும் செய்தார். 30வது ஓவரின் 4வது பந்தில் ஒரு மொதுவான பந்தை வீசி பாபர் அசாமை போல்ட் ஆக்கி பெவிலியன் திரும்பச் செய்தார். இது ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, 33வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், சவுத் ஷகீல் மற்றும் இப்திகார் அகமது அவுட் ஆகினார். மீண்டும் பந்து வீச வந்த பும்ரா முக்கிய விக்கெட்டான ரிஸ்வானை வீழ்த்தி அசத்தினார். அதுவரை சரிக்கு சமமாக சென்று கொண்டிருந்த ஆட்டமானது அப்படியே இந்தியாவின் பக்கம் திரும்பியது.
அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். இது பாகிஸ்தான் அணிக்கு ஒரு மோசமான ஆட்டமாக மாறியுள்ளது. அதேபோல் இது அவர்களது 3வது குறைந்த ஸ்கோராக பதிவாகி உள்ளது.
அதன்பின் களம் இறங்கிய இந்திய அணி அந்த இலக்கை துரத்த வெகு நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. ரோஹித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி முதல் ஓவரில் 2 பவுண்டரிகள், இரண்டாவது ஓவரில் 3 பவுண்டரிகள் என ரன்களை குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் அதை அப்ரிடி தகர்த்தார். டெங்குவால் அவதி பட்டு அதன்பின் அதிலிருந்து மீண்டு வந்த கில் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன் பின் கோலி. ஒரு பக்கம் விக்கெட்கள் வீழ்ந்தாலும், ரோஹித் சர்மா தனக்குண்டான பாணியிலேயே ரன்களை சேர்த்த வண்ணம் வந்தார். 50 ரன்களை 36 பந்துகளிலேயே கடந்தார். அதில் 4 சிக்ஸர்களும், 3 ஃபோர்களும் அடங்கும். கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ருத்ரதாண்டவம் ஆடி சதம் அடித்த ரோஹித் சர்மா மீண்டும் அதை நிகழ்த்துவார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் அப்ரிடியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
ஆனாலும், தொடக்கம் முதல் ரன்ரேட் 6க்கு மேலாக பயணித்ததுக்கு அவரே காரணம். மறுபுறம் மொதுவாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் போட்டியை ஃபோருடன் நிறைவடைய செய்தார். அவரும் அரைசதத்தை கடந்தார். இதனால் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 8-0 என்ற கணக்கில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியுள்ளது இந்திய அணி. அதேநேரம், நடப்பாண்டு உலகக் கோப்பையிலும், இந்தியா தனது ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: India Vs Pakistan: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!