கொல்கத்தா: கடந்த சனிக்கிழமை ஐசிசி உலகக் கோப்பை தொடரின் 12வது லீக் போட்டி, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்திய அணி உலக கோப்பையில் 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று மகத்தான சாதனையைப் படைத்தது.
இந்த வரலாற்றுத் தோல்வியைக் குறித்து முன்னால் பாகிஸ்தான் வீரர்கள் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் பல வீரர்களின் விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது, அந்நாட்டு முன்னாள் கேப்டனான முஷ்டாக் முகமது இந்த படுதோல்வி குறித்து விமர்சித்துள்ளார். அதேநேரம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை வாழ்த்தி உள்ளார்.
இது குறித்து ஈடிவியின் சிறப்பு பேட்டியில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முஷ்டாக் முகமது கூறியதாவது; "ஆட்டத்தின் ஒவ்வொறு துறையிலும் இந்திய அணி பாகிஸ்தான் அணியை மிஞ்சியது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இந்த வெற்றி கேப்டன் ரோஹித் சர்மாவையே சாரும். அவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார்.
அதே நேரத்தில், பாகிஸ்தான் அவர்களது தோல்வியை அவர்களே தேடிக் கொண்டார்கள். 155 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்த அவர்கள் அடுத்த 36 ரன்களில் 8 விக்கெட்டை இழந்ததற்கு அவர்களது மோசமான ஷாட்களே காரணம். மேலும், பந்து வீச்சும் எவ்வித உத்வேகமும் அளிக்கவில்லை என்றார். தொடர்ந்து பேசிய அவர்; "எப்படியாயினும், பாகிஸ்தானைப் பற்றி கவல படுவதற்கு ஒன்றும் இல்லை, மீதம் 6 போட்டிகள் உள்ளது. அதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியடைய வாழ்த்துகள் இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியா - பாகிஸ்தான் லீக் ஆட்டத்தில் 'ஜெய் ஸ்ரீ ராம்' விவகாரம்...! சென்னை கையாண்ட விதம் என்ன?