டெல்லி: ஐசிசி உலகக் கோப்பையின் 9வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா - ஆப்காஸ்தான் அணிகள் மோதுன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் களம் இறங்கினர்.
-
Jasprit Bumrah helps himself to his best ICC Men's Cricket World Cup figures with an exceptional display in Delhi 🏏#CWC23 #INDvAFG pic.twitter.com/neAa9wqBDT
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jasprit Bumrah helps himself to his best ICC Men's Cricket World Cup figures with an exceptional display in Delhi 🏏#CWC23 #INDvAFG pic.twitter.com/neAa9wqBDT
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 11, 2023Jasprit Bumrah helps himself to his best ICC Men's Cricket World Cup figures with an exceptional display in Delhi 🏏#CWC23 #INDvAFG pic.twitter.com/neAa9wqBDT
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 11, 2023
6.3 ஓவர்களில் 32 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து குர்பாஸ் 21, ரஹ்மத் ஷா 16 ரன்கள் என ஆட்டமிழந்து வெளியேறினர்.
பின்னர் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி - அஸ்மத்துல்லா உமர்சாய் கூட்டணி சேர்ந்தது. இந்த கூட்டணி அணிக்கு நிதானமான முறையில் ரன்களை சேர்க்க, இருவரும் அரைசதம் அடித்தனர். 62 ரன்கள் எடுத்த உமர்சாய் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் போல்ட் ஆக இந்த கூட்டணியானது பிரிந்தது.
-
India march to their second successive win off the back of a dominant display in Delhi 💪#CWC23 #INDvAFG pic.twitter.com/Z0gyJC8r5f
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India march to their second successive win off the back of a dominant display in Delhi 💪#CWC23 #INDvAFG pic.twitter.com/Z0gyJC8r5f
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 11, 2023India march to their second successive win off the back of a dominant display in Delhi 💪#CWC23 #INDvAFG pic.twitter.com/Z0gyJC8r5f
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 11, 2023
தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் நோக்கிச் சென்ற ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்களில் வெளியேறினார். அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களான அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களம் புகுந்தனர். இந்த ஜோடி தொடக்க முதலே அதிரடி காட்டியது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் விளாசினர். பார்ட்னர்ஷிப் 156 ரன்கள் எட்டிய நிலையில், இஷான் கிஷன் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
-
Most sixes in international cricket ✅
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Most hundreds in Cricket World Cup history ✅
Fastest-ever Cricket World Cup hundred by an Indian ✅
Rohit Sharma eclipsed several records during his 131 👊#CWC23 #INDvAFG pic.twitter.com/4tJNgAX8i6
">Most sixes in international cricket ✅
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 11, 2023
Most hundreds in Cricket World Cup history ✅
Fastest-ever Cricket World Cup hundred by an Indian ✅
Rohit Sharma eclipsed several records during his 131 👊#CWC23 #INDvAFG pic.twitter.com/4tJNgAX8i6Most sixes in international cricket ✅
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 11, 2023
Most hundreds in Cricket World Cup history ✅
Fastest-ever Cricket World Cup hundred by an Indian ✅
Rohit Sharma eclipsed several records during his 131 👊#CWC23 #INDvAFG pic.twitter.com/4tJNgAX8i6
அதன் பின் வந்த விராட் கோலி - ரோகித் சர்மாவுடன் சேர்ந்து ரன்களை சேர்ந்தார். ஒரு கட்டத்தில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா, ரஹித் கான் பந்து வீச்சில் போல்ட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: "ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வேன்" - சாதனை மங்கை வித்யா ராம்ராஜ்!