டெல்லி: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேசம் - இலங்கை அணிகள் விளையாடி வருகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
-
A terrific knock from Charith Asalanka as he compiled his second ODI hundred 💥@mastercardindia milestones 💯#BANvSL #CWC23 pic.twitter.com/tWGvCDeHlA
— ICC (@ICC) November 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A terrific knock from Charith Asalanka as he compiled his second ODI hundred 💥@mastercardindia milestones 💯#BANvSL #CWC23 pic.twitter.com/tWGvCDeHlA
— ICC (@ICC) November 6, 2023A terrific knock from Charith Asalanka as he compiled his second ODI hundred 💥@mastercardindia milestones 💯#BANvSL #CWC23 pic.twitter.com/tWGvCDeHlA
— ICC (@ICC) November 6, 2023
சாம்பியன்ஸ் டிராஃபி: வங்கதேசம், இலங்கை என இரு அணிகளும் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் இழந்து விட்டது என்று சொல்லி விட முடியாது. ஏனென்றால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறுவதற்கான போட்டி இன்னும் நீடித்து கொண்டுதான் இருக்கிறது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் டாப் - 8 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அந்த தொடருக்குத் தகுதி பெறும். ஏற்கனவே 6 அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குத் தகுதி பெற்று விட்ட நிலையில், மீதமுள்ள 2 இடங்களைப் பிடிக்க இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இந்த தொடரில் 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள இலங்கை அணி 2 வெற்றி 5 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியளில் 7வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் அணியை பொறுத்தவரையில் 7 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றி 6 தோல்விகளுடன் 2 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியளில் 9வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெல்வது இரு அணிகளுக்கு முக்கியம் ஆகும்.
காற்று மாசு: டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டி மேசமான நிலைமையில் உள்ளதால் முன்னதாக இரு அணி வீரர்களின் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. காற்று மாசு சூழலுக்கு ஏற்ப முடிவு எடுக்கும் படி போட்டியின் நடுவரை ஐஐசி அறிவுறுத்தி உள்ளது. மேலும், காற்று மாசு அதிகரித்து வீரர்கள் சிரமத்திற்குள்ளானால் நிலைமை சரியாகும் வரை ஆட்டத்தை நிறுத்தி வைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய நிசங்கா, பெரேரா ஜோடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இஸ்லாம் பந்தில் குசல் பெரேரா 4 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸ் 19 ரன்களுக்கு அவுட்டானார். சற்று நிலைத்து நின்று ஆடிய நிசங்கா 41 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய சமரவிக்ரமாவும் ஷகிப் அல் ஹசன் வீசிய பந்தில் அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய மேத்யூஸ் ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் சர்ச்சைக்குரிய timed out முறையில் அவுட்டானார். இந்நிலையில், ஒரு பக்கம் அசலங்கா நிலைத்து நின்று ஆடி சதம் (108) அடித்தார். அடுத்து களமிறங்கிய டி சில்வா (34), திக்ஷனா(22) ஆகியோர் ஓரளவு ரன்கள் சேர்க்க இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 279 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிங்க: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: இந்திய மகளிர் சாம்பியன்! ஜப்பானை வீழ்த்தி தங்கம் வென்றனர்!