புனே: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 30வது லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய நேரப்படி 2 மணிக்கு இப்போட்டியானது தொடங்க உள்ளது.
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் பொற்றுள்ளன. இருப்பினும் நெட் ரன் ரேட் அடிப்படையில் இலங்கை அணி 5 வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் அணி 7வது இடத்திலும் உள்ளது.
மைதானம் எப்படி: புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு உகந்த மைதானமாகவே காணப்படுகிறது. இந்த மைதானத்தில் நடந்த 8 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 300க்கும் மேல் ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் இன்றைய போட்டியில் சிக்ஸர் மலை பொழிய வாய்ப்புகள் உள்ளன.
அதேபோல் இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யலாம், என்றும் சேஸிங் செய்வது இந்த மைதனத்தில் சுலபமாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றன.
பலம்&பலவீனம்: இலங்கை ஆப்கான் என 2 அணிகளுமே 5 போட்டியில் 2 வெற்றி பெற்று அரையிறுதிக்கான களத்தில் உள்ளன. தொடரின் தொடக்கத்தில் முதல் 3 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த இலங்கை அணி கடந்த 2 போட்டிகளில் நெதர்லாந்து, இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரையில், 5 போட்டிகளில் 2 வரலாற்று வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளனர். நடப்பு உலக சாம்பியனா இங்கிலாந்து அணிக்கு எதிராக தங்களது அசத்தலான பந்து வீச்சால் வெற்றி பெற்றனர். மற்றொன்று பாகிஸ்தானுக்கு எதிராக தங்களது நிதானமான பேட்டிங்கின் மூலம் வெற்றி பெற்றனர். இருப்பினும் ஆப்காணிஸ்தன் அணிக்கு அதன் பந்து வீச்சு தான் பக்கபலமாக உள்ளது.
இதுவரை 2 முறை ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியோ வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்று நடக்கும் போட்டியில் அதற்கு பலி தீர்க்குமா ஆப்கானிஸ் அணி என்பதைப் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
கணிக்கபட்ட இரு அணி வீரர்கள்,
ஆப்கானிஸ்தான் அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (விகீ), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-அக், ஃபசல்ஹக் பாரூக்கி.
இலங்கை அணி : தம் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, லஹிரு குமார/துஷ்மந்த சமீர, தில்ஷான் மதுஷாங்க.
இதையும் படிங்க: IND VS ENG: இந்திய அணி அபார வெற்றி! பும்ரா, ஷமி அபாரம்!