புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 13வது எடிஷன் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என பத்து அணிகள் பங்கேற்கிறது. இதற்கான அட்டவனை கடந்த ஜூன் மாதமே வெளியிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு நலன் கருதி சில குறிப்பிட்ட ஆட்டங்களை மட்டும் மாற்ற கோரிக்கை எழுந்தது.
முக்கியமாக அக்டோபர் 15ம் நவராத்திரி பண்டிகை தொடங்குவதால் அன்றய தேதியில் அகமதாபத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை பாதுகாப்பு நலன் கருதி மாற்ற காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து ஐசிசி, பிசிசிஐ, மற்றும் இதர கிரிக்கெட் வாரியங்கள் ஆலோசித்து ஆட்டவனை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான திருத்தப்பட்ட ஆட்டவணையை ஐசிசி நேற்று (ஆகஸ்ட் 09) வெளியிட்டது.
இதையும் படிங்க: 2023 ஒருநாள் உலகக்கோப்பை:18 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்த ஆஸ்திரேலியா!
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 15க்கு பதிலாக 14ம் தேதி நடைபெறவுள்ளது. அதே போல், இந்தியா-நெதர்லாந்து இடையேயான போட்டி நவம்பர் 11ம் தேதியில் இருந்து 12ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஹைதராபத்தில் பாகிஸ்தான்-இலங்கை ஆட்டம் அக்டோபர்12ம் தேதிக்கு பதிலாக 10ம் தேதியும், வங்கதேசத்திற்கு எதிரான இங்கிலாந்து ஆட்டம் அக்டோபர் 10ம் தேதி பகல் இரவாக மாற்றாப்பட்டுள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் மோதும் ஆட்டமானது நவம்பர் 12ம் தேதிக்கு பதிலாக 11ம் தேதி நடத்தபடுகிறது. நியூசிலாந்து-வங்கதேசம் அணிகள் அக்டோபர் 14ம் தேதி சென்னையில் பகல் இரவாக நடைபெற இருந்த ஆட்டமானது அக்டோபர் 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆட்டம் அக்டோபர் 13க்கு பதிலாக 12ம் தேதியே மோதவுள்ளன.
மேலும், இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் அக்டோபர் 14ம் தேதிக்கு பதிலாக 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. ஆட்டங்களின் தேதிகள் மற்றும் நேரம் மாற்றப்பட்டாலும் இடங்கள் மாற்றப்படவில்லை. இருப்பினும், ஏற்கனவே பயண திட்டத்தை நிர்ணயிதிட்ட ரசிகர்களுக்கு இது பல்வேறு சிக்கல்களை தரும்.
உலகக் கோப்பைக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வருகிற 25ம் தேதி முதல் தொடங்கும் என்றும் இதர விவரங்கள் அக்டோபர் 15ம் தேதிக்கு மேல் வெளியாகும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆசிய ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி!