ETV Bharat / sports

கிரிக்கெட் அரசன் வீழ்ந்தது எப்படி? உலக கோப்பை முதல் தகுதிச் சுற்று வெளியேற்றம் வரை! செய்யத் தவறியது என்ன? - உலக கோப்பை கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் வெளியேற்றம்

West Indies Failed to qualify 2023 World cup cricket : இரண்டு முறை உலக கோப்பை வெற்றியாளர், 40 ஆண்டுகள் உலக கிரிக்கெட் அரங்கில் முக்கிய போட்டியாளர் என பல்வேறு சிறப்புகளை கொண்டு இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் முறையாக 2023ஆன ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தகுதிச் சுற்றுடன் வெளியேறியது. கிரிக்கெட்டின் அரசின் என வர்ணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் வீழ்ந்ததன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

West Indies
West Indies
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 2:15 PM IST

ஐதராபாத் : உலகம் முழுவதும் உலக கோப்பை கிரிக்கெட் ஜுரம் பரவத் தொடங்கி விட்டது. 2023 ஆம் ஆண்டு உலக கோப்பை வெல்லப் போகும் அணி யார் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் எழத் தொடங்கி விட்டது. அது இந்தியா, ஆஸ்திரேலியாவா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தா என ரசிகர்கள் இப்போதே தங்களுக்குள் போட்டி போட தொடங்கிவிட்டனர்.

மைதானத்திற்குள்ளே கோப்பைக்காக மல்லுக்கட்டும் வீரர்களின் எண்ணிக்கையை காட்டிலும், மைதானத்திற்கு வெளியே தங்களை பிரதிபலிக்கும் வீரர்களுக்காக போட்டிப் போடும் ரசிகர்களின் கிரிக்கெட் பங்களிப்பு அளப்பறியது. தற்போதைய சூழலில் உலக கோப்பையை வெல்லும் அணி எது என்று கேள்வி எழுப்பினால் ஒவ்வொருவரின் பதிலும் வெவ்வேறாக இருக்கும்.

ஒருவர் இந்தியாவில் தொடர் நடப்பதால் நிச்சயம் இந்தியா தான் வெல்லும் என்பார். மற்றவர்கள் இங்கிலாந்து மீண்டும் கோப்பையை தக்கவைக்கும், ஆஸ்திரேலியா தான் சாம்பியன் பட்டம் வெல்லும், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என தங்களின் விருப்ப அணியை சொல்லிக் கொண்டே போவர்.

ஆனால், இரண்டு முறை உலக கோப்பை கிரிக்கெட் 20 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை ஆட்சி செய்த ஒரு அணியின் பெயர் பலரின் எண்ணங்களை விட்டு கரைந்து போனது என்பது நிதர்சனமான உண்மை. என்னதான் கிரிக்கெட்டை இங்கிலாந்து அணி உருவாக்கி இருந்தாலும், அந்த அணிக்கே உலக கோப்பையை வெல்ல நாற்பது ஆண்டுகள் தேவைப்பட்டன.

ஆனால், கிரிக்கெட்டுக்கு அப்பாற்றபட்ட ஒரு அணி, 40 முதல் 50 ஆண்டுகள், மற்ற உலக அணிகளுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடி மூடிசூடா மன்னனாக திகழ்ந்தது. அது தான் வெஸ்ட் இண்டீஸ் அணி. 1970களில் மெல்ல கிரிக்கெட் உலகளவில் பரவி பலரது கவனத்தை ஈர்த்தது. அதற்கு முன் வரை கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்திலும், அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் மட்டுமே விளையாடப்பட்டு வந்தன.

அப்படி உலக கவனம் ஈர்த்த கிரிக்கெட்டில் நடந்த முதலாவது உலக கோப்பையை, யாரும் எதிர்பாராத விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றிச் சென்றது உலகையே சற்று உற்று நோக்கத் தொடங்கியது. எந்த ஒரு செயலையும் பிரம்மாண்டமாக கூறும் போது அதன் மீதான பார்வை வேறுபடும் என்பதற்கு உதாரணம் போல், வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தோற்றம் மற்ற நாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மலைப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியது.

  • #OnThisDay in 1975, Clive Lloyd became the first man to lift the Cricket World Cup!

    His all-conquering team beat Australia by 17 runs in the final at Lord's.

    Lloyd hit 102 and Viv Richards was amazing in the outfield on one of the greatest days in our history! pic.twitter.com/EfZPfTIG13

    — Windies Cricket (@windiescricket) June 21, 2018 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஆறு அடி உயரம், கட்டு மஸ்தான உடல்வாகு, நேர்த்தியான ஆட்டம் உள்ளிட்ட அம்சங்களே உலக அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி மீதான அதீத கவனத்தை ஈர்த்தது. 70களில் தங்களுக்கே உரிய பாணியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் உலக மிரட்டி வந்தனர். ஆக்ரோஷமான பந்துவீச்சு, அடித்து ஆடும் பேட்டிங் ஸ்டைல், நேர்த்தியான பீல்டிங் உள்ளிட்ட திறன்களால் வெஸ்ட் இண்டீஸ் அணி உலக அரங்கில் வெற்றிகரமான அணியாக கோலோச்சி வந்தது.

தற்போதைய காலக் கட்டத்தில் அதிவேகமாக பந்து வீசக் கூடிய வீரர்கள் குறித்து கணக்கெடுத்தால், பிரெட் லீ, சோயிப் அக்தர், ஷான் டைட், ஷேன் பாண்ட், டேல் ஸ்டெயின் என அங்கொன்று இங்கொன்றாக பல்வேறு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ரசிகர்களின் நினைவுகளுக்கு வருவர். ஆனால், 70 - 90 காலக்கட்டங்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் என்று எண்ணினால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மட்டுமே 4 முதல் 5 வீரர்கள் அதிவேகமாக பந்துவீசக் கூடியவர்கள் இருப்பர்.

West Indies
West Indies

உதாரணத்திற்கு மைக்கெல் ஹோல்டிங், மல்கோம் மார்ஷல், ஆண்டி ரோபர்ட்ஸ், ஜோயல் கார்னர் என உலக அரங்கை மிரட்டக் கூடிய வேகப்பந்து வீச்சாளர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி தன்னகத்தே கொண்டு இருந்தது. இவர்களுக்கு அணி வேறுபாடு இன்றி உலக அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருந்தது என்றால் அது மிகையாகாது.

West Indies
West Indies

இவர்கள் பந்துவீசும் போது எதிரணியின் ரசிகர் கூட பேட்ஸ்மேன் அவுட்டாக வேண்டும் என எதிர்பார்க்கும் அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சு திறம் பட இருக்கும் எனக் கூறப்படுகிறது. அப்படி 40 முதல் 50 ஆண்டுகள் உலக கிரிக்கெட் அரங்கை ஆட்சி செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் இன்றைய நிலை பரிதாபத்திற்குரிய வகையில் உள்ளது.

இரண்டு முறை சாம்பியன், 40 ஆண்டுகள் கிரிக்கெட் அரங்கின் முடிசூடா அரசன் என விளங்கி வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2023 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தகுதிச் சுற்றுடன் வெளியேறி இருப்பது கிரிக்கெட் ஆர்வலர்களையே அதிர்ச்சிக்குள் ஆழ்த்தி உள்ளது. உலக கோப்பைக்கு ஏற்கனவே 8 அணிகள் தகுதி பெற்று இருந்த நிலையில், கடைசியாக இருந்த 2 இடத்திற்கான உலக கோப்பைத் தகுதிச் சுற்று போட்டி ஜிம்பாப்வேயில் நடந்தது.

கடைசி இரண்டு இடங்களை பிடிக்க, அமெரிக்கா, நேபாளம், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன் ஆகிய 10 அணிகள் இடையே போட்டி நிலவியது. தகுதி சுற்றில் 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்படன.

இதில் அமெரிக்கா, நேபாளம், அயர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை இழந்ந்து தொடரை விட்டு வெளியேறியன. உலக கோப்பை தொடருக்கான இருப்பை உறுதி செய்யும் சூப்பர் சிக்ஸ் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொண்டது.

இதில் டாசை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் கைகளை விரிக்க வெறும் 181 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 43 புள்ளி 3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் 45 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறாமல் போனது. தகுதிச் சுற்றில் ஸ்காட்லாந்து அணியிடம் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது ஒட்டுமொத்த கிரிக்கெட் ஆர்வலர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

West Indies
West Indies

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் வரிசை பிரையன் லாரா, ராம்நரேஷ் சர்வான், ஷிவ் நாராயண் சந்தர்பால், கிறிஸ் கெய்ல் போன்ற ஜாம்பவான்கள் ஓரளவுக்கு கையாளப்பட்டாலும் ஓட்டுமொத்த அணியில் ஏற்பட்ட பின்னடைவே அந்த அணியின் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்பட்டது.

ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான கிரிக்கெட்டுகளில் கிறிஸ் கெயில், சுனில் நரேன், டுவெய்ன் பிராவோ உள்ளிட்ட பல்வேறு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெரிய அளவில் ஆதிக்கத்தை செலுத்தினாலும் ஒரு அணியாக அவர்களது திறமையை வெளிக் கொணர முடியாமல் போனது என்பது துரதிர்ஷ்டவசமானதாக கருதப்படுகிறது. கிரிக்கெட் உலகில் பிராகசித்துக் கொண்டு இருந்த சூரியன் அஸ்தமித்து வருவது சோகத்தின் உச்சம் என்றே கூறலாம்.

West Indies
West Indies

இதையும் படிங்க : Ravindra Jadeja : ஆட்டத்தை தீர்மானிக்கும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா! பந்தயம் கட்டும் பயிற்சியாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.