ETV Bharat / sports

தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்: ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் விலகல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 5:24 PM IST

Glenn Maxwell: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Australia team
ஆஸ்திரேலியா அணி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாட உள்ளது. இரு அணிகளும் மோதும் டி20 தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிகளுக்கான அணியை சமீபத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்திருந்த ஆல் ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல், தனது கணுக்காலில் எற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 34 வயதுடைய க்ளென் மேக்ஸ்வெல், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக இடது காலில் எற்கனவே உலோக பிளேட் வைத்திருந்தார். தற்போது அதே காலில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது காயம் எற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 4×400 Metres Relay: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாதனை படைத்த இந்திய அணி.. பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து!

வர இருக்கும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. அதற்கு க்ளென் மேக்ஸ்வெல் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், க்ளென் மேக்ஸ்வெலுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மதீவ் வேட் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

டி20 தொடர் முடிந்த பின்னர் க்ளென் மேக்ஸ்வெலுக்கு குழந்தை பிறக்க இருப்பதை முன்னிட்டு, அவர் ஆஸ்திரேலியா திரும்புவதால் ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது டி20 தொடரில் இருந்தும் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: World Athletics Championship: 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5வது இடம்! தேசிய சாதனை படைத்த வீராங்கனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.