ETV Bharat / sports

"அன்று சிரித்தேன்.. இன்று பெருமைப்படுகிறேன்..." கோலி குறித்து சச்சின் உதிர்த்த வார்த்தைகள்! - சச்சின் தெண்டுல்கர் ட்விட்டர்

Sachin Tendulkar wish Virat Kohli reaches 50 odi hundered : ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் விளாசிய விராட் கோலிக்கு, முன்னாள் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர் முதல் சினிமா பிரபலங்கள் வரை வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 9:37 PM IST

ஐதராபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்ற்ம் சுப்மான் கில் தொடங்கினர்.

அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா தனது பங்கிற்கு 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி குழுமியிருந்த ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

அபாரமாக விளையாடிய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50வது சதத்தை பூர்த்தி செய்தார். 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய ஜாம்பவான் சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடித்து புது உலக சாதனை படைத்தார். அதேபோல் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓட்டுமொத்தமாக 701 ரன்கள் குவித்து உள்ள விராட் கோலி, ஒரு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சச்சின் தெண்டுல்கரின் அதிகபட்ச ரன் குவிப்பு சாதனையையும் முறியடித்து புது வரலாறு படைத்தார்.

இதுவரை, 291 ஆட்டம் 279 இன்னிங்ஸ்களில் விளையாடி உள்ள விராட் கோலி, 72 அரைசதம் 50 சதம் என அடித்து 13 ஆயிரத்து 794 ரன்களை குவித்து சாதனை படைத்து உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதம் விளாசிய விராட் கோலிக்கு பாலிவுட் முதல் கோலிவுட் என அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

விராட் கோலியின் சாதனையை பாராட்டிய சச்சின் தெண்டுல்கர் அவரை கட்டி அணைத்து தனது அன்பை பகிர்ந்து கொண்டார். மேலும், சச்சின் தெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய டிரஸ்ஸிங் ரூமில் நான் உங்களை முதன் முதலில் சந்தித்தபோது, அணியின் மற்ற வீரர்கள் என் கால்களைத் தொடுமாறு உன்னைக் கூறி கேலி செய்தார்கள்.

  • The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.

    I… pic.twitter.com/KcdoPwgzkX

    — Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டுவிட்டீர்கள். அந்த சிறுவன் ‘விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட எனக்கு வேறு மகிழ்ச்சி இல்லை. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியிலும், மிகப் பெரிய அரங்கில், அதுவும் எனது சொந்த மைதானத்தில் அதனை செய்தது இன்னும் சிறப்பானது" என்று பதிவுட்டு உள்ளார்.

அதேபோல் பாலிவுட் திரைப் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பதிவுட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Virat Kohli 50th Century : ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி 50வது சதம்! சச்சின் சாதனை முறியடிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.