ETV Bharat / sports

ஜெயிக்கிற அணிக்கு இவ்வளவு பரிசுத் தொகையா? வியக்க வைக்கும் பரிசுத் தொகை லிஸ்ட்! - இந்தியா ஆஸ்திரேலியா உலக கோப்பை கிரிக்கெட் 2023

World Cup Cricket Final 2023 :உலக கோப்பை கிரிக்கெட் பட்டத்தை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் 33 கோடியே 20 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. பண மழையில் நனையப் போகும் அணி எது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

icc
icc
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2023, 10:20 PM IST

ஐதராபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி நாக் -அவுட் சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (அக். 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 24 மணி நேரம் கூட இல்லாத இந்த இறுதிப் போட்டியை காண கோடிக்கணக்கான இதயங்கள் துடித்துக் கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில், உலக கோப்பையை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. உலக கோப்பையை வெல்லும் இந்தியா அல்லது ஆஸ்திரேலியா அணிக்கு ஐசிசி தரப்பில் 33 கோடியே 20 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.

அதேபோல், 2வது இடம் பிடிக்கும் அணிக்கு இந்திய மதிப்பில் 16 கோடியே 60 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. அரைஇறுதி ஆட்டங்களில் தோல்வியை தழுவி இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய மதிப்பில் 6 கோடியே 64 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.

அதேபோல் லீக் சுற்று ஆட்டங்களில் தோல்வி அடைந்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை இழந்த இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 83 லட்ச ரூபாய் தலா ஒவ்வொரு அணிக்கும் பரிசுத் தொகையாக வழங்கப் பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்தமாக 45 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் 9 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் லீக் ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பரிசுத் தொகை அறிவித்து உள்ளது.

லீக் ஆட்டங்களில் வெற்றி பெறும் ஒவ்வொரு அணிக்கும் இந்திய மதிப்பில் 33 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பரிசுத் தொகையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்து உள்ளது. இந்திய அணி அனைத்து லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று உள்ள நிலையில், ஏறத்தாழ 2 கோடியே 98 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பரிசாக வென்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பு சீசனில் நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்று உள்ளன. ஆப்கானிஸ்தான் அணி சிறந்த முறையில் விளையாடி இங்கிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட நான்கு அணிகளை வீழ்த்தி உலக கோப்பை கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : Ind Vs Aus : "2011 சச்சினுக்காக... 2023 டிராவிட்டுக்காக".. "உலக கோப்பை வெல்வது மகிழ்ச்சியான தருணம்" - ரோகித் சர்மா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.