ETV Bharat / sports

2ஆவது ஒருநாள் போட்டி: மோர்கன், பில்லிங்ஸ் விளையாடுவது சந்தேகம் - மோர்கன்

இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், கேப்டன் மோர்கன் ஆகியோர் காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

Eoin Morgan, Sam Billings, India vs England, Injury, 2வது ஒருநாள் போட்டி மோர்கன் பில்லிங்ஸ் விளையாடுவது சந்தேகம், Morgan Billings doubtful starters for 2nd ODI, Pune, மோர்கன், சாம் பில்லிங்ஸ்
IND vs ENG: Morgan, Billings doubtful starters for 2nd ODI
author img

By

Published : Mar 24, 2021, 8:18 PM IST

புனே: இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், சாம் பில்லிங்ஸ் ஆகியோர் காயமடைந்துள்ளதால், அவர்கள் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது

மோர்கனின் வலது கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவில் நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளதால், பேட்டிங்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மற்றொரு வீரர் சாம் பில்லிங்ஸ், பவுண்டரியைத் தடுக்க டைவ் செய்ததைத் தொடர்ந்து அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது போட்டியில் விளையாடுவது குறித்து போட்டியன்றுதான் முடிவுசெய்ய இயலும் என மோர்கன் போட்டிக்குப் பிந்தைய நேர்காணலில் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாகப் பேட்டிங்கிலும், பீல்டிங்கிலும் சரியாக விளையாட முடியவில்லை எனவும் சாம் பில்லிங்ஸ் காயத்தினால் பாதிக்கப்பட்டதால்தான் அவரிடம் பேட்டிங் குறித்து எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. வரும் போட்டிகளில் 100 விழுக்காடு என்னுடைய ஆட்டத்தை ஆட முடியாவிட்டாலும் என்னால் பேட்டிங் செய்ய முடியும் என்றும் மோர்கன் கூறினார்.

வரும் போட்டிகளில் அணி நிர்வாகம் மாட் பார்கின்சன், ரீஸ் டோப்லி, அறிமுக வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கலாம் எனத் தெரிவித்துள்ள மோர்கன், "ஒருநாள் போட்டித் தொடர் என்பது சிறந்த ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுப்பதற்கும், ஆட்டத்தை மேம்படுத்துவதற்கும் உதவிகரமாக இருப்பதால் புதிய வீரர்கள் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம்" என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் ஆர்ச்சர் பங்கேற்பது சந்தேகம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.