ETV Bharat / sports

IND vs ENG: சுழலில் மாயாஜாலம் செய்த அஸ்வின்; 420 ரன்கள் இலக்கு - பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்

இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த அஸ்வின், அந்த அணியினரை தனது அற்புத சுழற்பந்து வீச்சால் கட்டுப்படுத்தினார். இரண்டு நாள்கள் முழுவதும் இங்கிலாந்து பேட்டிங் செய்தபோது டிராவில் முடியும் என்று கூறப்பட்ட சேப்பாக்கம் டெஸ்ட், தற்போது இருஅணிகளுக்கும் சம வாய்ப்பை ஏற்படுத்தி பரபரப்பான கட்டத்தில் உள்ளது.

Ind vs Eng 1st test
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள்
author img

By

Published : Feb 8, 2021, 8:41 PM IST

சென்னை: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 420 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. பரபரப்பாக நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்தை விட 321 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தனது நான்காவது நாள் ஆட்டத்தை இன்று (பிப். 8) தொடங்கியது. மூன்றாவது நாளான நேற்று (பிப். 7) மூன்றாம் பகுதியில், அஸ்வின் - சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக பிட்சில் பந்து நன்கு திரும்பி ஒத்துழைத்தாலும், வாஷிங்டன் சுந்தர் ஜோடி தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் சரிவிலிருந்து இந்திய அணியை மீட்டனர்.

மிரட்டிய அஸ்வின் - வாஷிங்டன் சுந்தர்

இதையடுத்து 257 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. அஸ்வின் - வாஷிங்டன் சுந்தர் ஜோடி தடுப்பாட்டத்தை விடுத்து கணிசமாக ரன்களை குவிக்க தொடங்கினர்.

Ashwin and washington sundar
சிறப்பாக பேட்டிங் செய்த அஸ்வின் - வாஷிங்டன் சுந்தர்

சிறப்பாக விளையாடி வந்த அஸ்வின் 31 ரன்கள் எடுத்திருந்தபோது, இடது கை சுழற்பந்து வீச்சாளர் லீச் பந்தில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் முறையில் சிக்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மற்ற பேட்ஸ்மேன்களான இஷாந்த் ஷர்மா 4, நதீம் மற்றும் பும்ரா ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகி அவருக்கு பெரிதாக ஒத்துழைக்காமல் அடுத்தடுத்து அவுட்டாக, இந்திய அணி 337 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 85 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்

ஃபாலோ ஆன் தராத இங்கிலாந்து

241 ரன்கள் பின் தங்கிய நிலையில், இந்திய அணி ஃபாலோ ஆன் ஆகாதபோதிலும், இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய தீர்மாணித்து இங்கிலாந்து அணி களமிறங்கியது.

சுழலில் அச்சுறுத்திய அஸ்வின்

இதையடுத்து தொடக்கத்தில் அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் அஸ்வின். இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே தொடக்க பேட்ஸ்மேன் பர்ன்ஸ்சை தனது அபார சுழற்பந்து வீச்சால் வெளியேற்றினார். இதன் மூலம் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து புதிய சாதனையை படைத்தார் அஸ்வின்.

ashwin takes wicket in 1st ball
முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனை

ஏற்கனவே 241 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்குவிக்க தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 32 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து, பும்ரா பந்தில் அவுட்டானார்.

Bumrah picks joe root wicket
ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா

இவருக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக போப் 28, பெஸ் 25, பட்லர் 24 ரன்கள் எடுத்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்காத நிலையில் இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சுழலில் மிரட்டிய அஸ்வின் 61 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் நதீம் 2, பும்ரா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மீண்டும் சொதப்பிய ரோஹித்

16 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆச்சர் பந்தில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் என அதிரடி காட்டினார். பின்னர் ஜேக் லீச்சின் துல்லியமான பந்து வீச்சில் கிளீன் போஸ்டு ஆகி பெவிலியன் திரும்பினார். முதல் இன்னிங்ஸில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றிய ஹோஹித் இரண்டாவது இன்னிங்ஸில் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொதப்பினார்.

புஜாரா தடுப்பாட்டம்

பின்னர் களமிறங்கிய புஜாரா, மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் கில் ஆகியோர் இணைந்து தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடுகளம் தற்போது சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைப்பதால் நாளைய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பரபரப்புக்கு மிச்சமிருக்காது எனத் தெரிகிறது.

இரட்டை சதம் அடித்த ரூட்

சென்னை சேப்பாகத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. இரண்டு நாள்கள் முழுவதுமாக பேட்டிங் ஆடிய இங்கிலாந்து, மூன்றாவது நாள் உணவு இடைவெளிக்கும் முன்பு 578 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

joe butler
அதிரடியாக ரன் குவித்த ஜோஸ் பட்லர்

அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதம் விளாசி, 218 ரன்கள் எடுத்தார். இந்திய வீரர்கள் அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 225 ரன்கள் எடுத்திருந்தபோதே 6 விக்கெட்டுகளை இழந்து இந்தியா அணி தடுமாறியபோது அஸ்வின் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நம்பிக்கை அளித்தனர்.

இந்நிலையில் நாளை (பிப்.9) 5ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற 381 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.

இதையும் படிங்க: போட்டி ஊதியத்தை உத்தரகண்ட் மீட்பு பணிக்கு அளிக்கும் ரிஷப்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.