ETV Bharat / sports

‘கவாஸ்கர் என்றும் என்னுடைய ஹீரோதான்’ - சச்சின் டெண்டுல்கர் - மாஸ்டர் பிளாஸ்டர்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் 50 ஆண்டுகள் கடந்துள்ளதை அடுத்து, அவருக்கு மரியாதை செய்யும்விதமாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் கவாஸ்கரை புகழ்ந்துள்ளார்.

Gavaskar "remains my hero", says Tendulkar

author img

By

Published : Mar 6, 2021, 1:09 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும் கேப்டனுமான சுனில் கவாஸ்கர், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இன்றுடன் ஐம்பது ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனை நினைவுகூரும்விதமாக, இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் நான்காவது டெஸ்ட் போட்டியின்போது வர்ணனையிலிருந்து சுனில் காவஸ்கருக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தொப்பியை அன்பளிப்பாக வழங்கி கவுரவித்தார்.

  • Join me in celebrating the 50th anniversary of Shri Sunil Gavaskar Ji's Test debut for 🇮🇳. It is indeed a momentous occasion for all Indians and we are getting to celebrate it at the world's largest cricket facility Narendra Modi Stadium 🏟️ @ICC @BCCI pic.twitter.com/NzolBqvKzI

    — Jay Shah (@JayShah) March 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின் ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கருக்கு மரியாதை செலுத்தும்விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை இட்டுள்ளார்.

இது குறித்த சச்சின் டெண்டுல்கரின் ட்விட்டர் பதிவில், "50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் சுனில் கவாஸ்கர் தனது அதிரடியான ஆட்டத்தால் கிரிக்கெட் உலகை ஆளத் தொடங்கினார். அவரது முதல் தொடரிலேயே 774 ரன்களைக் குவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அது வளர்ந்துவரும் ஒவ்வொரு வீரருக்கும் கவாஸ்கரை நாயகனாகக் காட்டியது.

இவரது அதிரடியான ஆட்டத்தினால் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராகவும், இங்கிலாந்து அணிக்கெதிராகவும் தொடரை வென்றது. அப்போதுதான் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஒரு புதிய பொருள் கிடைத்தது.

எனது சிறுவயது முதலே நான் அவரைப்போல ஆக வேண்டும் என்று முயற்சி செய்துவருகிறேன். அது ஒருபோதும் மாறவில்லை. இன்றும் அவர் என்னுடைய நாயகனாகத்தான் இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 50 ஆண்டுகளைக் கடந்து பொன்விழாவைக் கொண்டாடிவரும் சுனில் கவாஸ்கருக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 125 டெஸ்ட், 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் கவாஸ்கர், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார். இதில் 35 சதங்கள், 72 அரைசதங்களும் அடங்கும்.

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் சுனில் கவாஸ்கர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: WI vs SL: குணதிலக, சண்டகன் அபாரம் - வெ.இண்டீஸை வீழ்த்திய இலங்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.