ஹைதராபாத் : இங்கிலாந்து சென்ற இந்திய வீரர்கள் இருவருக்கு கரோனா பாதிப்புகள் தென்பட்டன. அவர்களுக்கு அறிகுறியற்ற கரோனா பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ஒருவருக்கு கோவிட் நெகடிவ் என சான்றிதழ் வந்துள்ளது. அவரும் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளார்.
தொண்டை வலி- கரோனா
முன்னதாக வீரர்கள் இருவருக்கும் தொண்டை வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்துள்ளன. இதையடுத்து இருவரும் கோவிட் பரிசோதனை செய்துள்ளனர்.
இருப்பினும் அவர்களுக்கு வேறு எவ்வித அறிகுறிகளும் தென்படவில்லை. முன்னதாக இந்திய வீரர்கள் ஜூன் 23ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடினார்கள்.
ஆகஸ்ட் 4இல் போட்டி
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய வீரர்கள் இருவர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளது தேர்வு குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வீரர்களுடன் தொடர்பில் இருந்த இதர ஊழியர்கள் மற்ற வீரர்களும் கரோனா பரிசோதனை நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவில் 42 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!