மான்செஸ்டர்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று (ஜூலை 17) நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வுகளிக்கப்பட்டு, சிராஜிற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
-
A look at our Playing XI for the game.
— BCCI (@BCCI) July 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/TkbzNYfLrw
">A look at our Playing XI for the game.
— BCCI (@BCCI) July 17, 2022
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/TkbzNYfLrwA look at our Playing XI for the game.
— BCCI (@BCCI) July 17, 2022
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/TkbzNYfLrw
இதன்படி இங்கிலாந்து ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஓப்பனர்களாக களமிறங்கினர். முகமது சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரில் பேர்ஸ்டோவ், ரூட் ஆகியோர் டக்-அவுட்டாகி வெளியேறினர். அதைத் தொடர்ந்து, சற்றுநேரம் அதிரடி காட்டிய ராய் 7 பவுண்டரிகளுடன் 41 (31) ரன்களை எடுத்தபோது, ஹர்திக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பென் ஸ்டோக்ஸ் 27 ரன்களில் ஹர்திக்கிடமே வீழ்ந்தார்.
-
That's a double wicket maiden over from @mdsirajofficial 💥💥
— BCCI (@BCCI) July 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Bairstow and Root depart for a duck.
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/E4QDMgvKZa
">That's a double wicket maiden over from @mdsirajofficial 💥💥
— BCCI (@BCCI) July 17, 2022
Bairstow and Root depart for a duck.
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/E4QDMgvKZaThat's a double wicket maiden over from @mdsirajofficial 💥💥
— BCCI (@BCCI) July 17, 2022
Bairstow and Root depart for a duck.
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/E4QDMgvKZa
இதனால் தற்போது, இங்கிலாந்து அணி 25 ஓவர்கள் முடிவில் 131/4 என்ற நிலையில் விளையாடி வருகிறது. தற்போது, பட்லர் 32 ரன்களுடனும், மொயின் அலி 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதிவரை நடைபெற்றது. இதில், இங்கிலாந்து அணி வென்று டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. அதன்பின்னர், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
தற்போது, ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியை வென்றுள்ள நிலையில், தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இன்றைய போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
-
Hardik Pandya gets the big wicket of Jason Roy 👌👌
— BCCI (@BCCI) July 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/RkHCFsAZsG
">Hardik Pandya gets the big wicket of Jason Roy 👌👌
— BCCI (@BCCI) July 17, 2022
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/RkHCFsAZsGHardik Pandya gets the big wicket of Jason Roy 👌👌
— BCCI (@BCCI) July 17, 2022
Live - https://t.co/radUqNrOn1 #ENGvIND pic.twitter.com/RkHCFsAZsG
பிளேயிங் XI
இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சஹால், முகமது சிராஜ், முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், லியம் லிவிங்ஸ்டன், மொயின் அலி, டேவிட் வில்லி, ஓவர்டன், பிரைடன் கார்ஸ். ரீஸ் டோப்லி.
இதையும் படிங்க: சிங்கப்பூர் ஓபனில் சாம்பியன் - பிவி சிந்துவிற்கு மற்றொரு மணிமகுடம்