கொழும்பு: 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கவுள்ளன.
இதில் முதல் போட்டியில் பி பிரிவில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதுகின்றன. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, வரும் 28ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்த தொடருக்கான இலங்கை அணி இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதில் தசுன் ஷனகா, வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் பயிற்சியின் போது, சமீராவுக்கு காலில் காயம் ஏற்பட்டதால், அவர் ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துஷ்மந்த சமீராவுக்கு பதிலாக நுவான் துஷாரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான சமீரா விலகியுள்ளது இலங்கை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பையிலிருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி