டெல்லி : கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு டெல்லி குடும்ப நல நீதிமன்றம் விவாகாரத்து வழங்கி உள்ளது.
ஷிகர் தவான் கடந்த 2012ஆம் ஆண்டு தன்னை விட 10 வயது மூத்தவரான குத்துச் சண்டை வீராங்கனை ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஜோராவர் என்ற மகன் உள்ளார். இவர்களின் திருமணத்துக்கு முன்பே ஆயிஷா முகர்ஜிக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்று இருந்தது.
ஆயிஷாவுக்கும் ஆஸ்திரேலிய தொழிலதிபருக்கும் 2 மகள்களும் பிறந்து உள்ளனர். தொழிலதிபருடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக விவாகரத்து பெற்ற ஆயிஷா முகர்ஜி, அதன் பின்னர் ஷிகர் தவானை திருமணம் செய்து கொண்டார். ஷிகர் தவானுக்கும், ஆயிஷா முகர்ஜிக்கும் 10 வயது வித்தியாசம் உள்ள நிலையில், தவான் வீட்டில் முதலில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், பின்னர் ஒத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.
தவான் - ஆயிஷா தம்பதிக்கு ஜோராவார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், ஆயிஷான் தன்னை மனதளவில் துன்புறுத்துவதாகவும் அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து வென்றும் என்றும் ஷிகர் தவான் டெல்லி குடும்ப நல நீதிமன்றத்தில் புகார் அளித்து உள்ளார். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் ஆயிஷாவும், தானும் இணைந்து வாழவில்லை என்றும், ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் ஆயிஷா, திருமணத்திற்கு பின்னர் தன்னுடன் இந்தியாவிலேயே இருப்பதாக உத்தரவாதம் அளித்ததை அடுத்து அவரது இரண்டு மகள்களையும் தத்தெடுத்துக் கொண்டதாகவும் ஷிகர் தவான் தனது புகார் மனுவில் தெரிவித்து உள்ளார்.
இந்த மனுவை விசாரித்து டெல்லி குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஹரீஷ் குமார், தவானின் வாதங்களை ஏற்று அவருக்கு விவாகரத்து வழங்குவதாக தெரிவித்தார். மேலும், ஷிகர் தவானின் மகன் ஜோராவர் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை நாட்களில் பாதியை தவான் மற்றும் அவரது குடும்பத்தினருடன் செலவிடும் வகையில், மகன் ஜோராவரை இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டும் என்றும் ஆயிஷாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், ஷிகர் தவான் விரும்பினால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று மகனை பார்க்கலாம் என்றும் இருவரும் வீடியோ காலில் சந்தித்து உரையாட தாய் ஆயிஷா முகர்ஜி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க : World Cup 2023: தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதல்!